பத்து படங்களில் நடித்தும் பிரயோஜனமில்லை.. கோமாளி அஸ்வினுக்கு வந்த நல்ல காலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற அஸ்வின் தற்போது சினிமாவில் ஹீரோவாக மாறி இருக்கிறார். ஆனால் அவரின் முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அவர் கூறிய சில கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது அவர் தன்னிடம் இயக்குனர்கள் கதை சொல்லும் போது தூங்கி விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது சோசியல் மீடியா முழுவதிலும் பெரும் விவாதமாக மாறியது. அதை தொடர்ந்து அஸ்வினை பலரும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் செய்து கலாய்த்து வந்தனர். இதனால் அவர் ஹீரோவாக அறிமுகமான என்ன சொல்லப் போகிறாய் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாமல் போனது.

அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் 10 படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாத நிலை தான் அஸ்வினின் நிலை. ஆனால் தற்போது ஜாக்பாட் அடித்த மாதிரி குக் வித் கோமாளி அஸ்வினுக்கு நல்ல காலம் பிறந்திருக்குது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் அஸ்வின் தற்போது கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செம்பி படத்தில் இவரும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தை மைனா, கும்கி, கயல் போன்ற அற்புதமான படைப்புகளை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஆகையால் செம்பி படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்த பலரும் படத்திற்கு நிச்சயம் நேஷனல் அவார்டு கிடைக்கும், தரமான படம் என்று பாராட்டி உள்ளனர். இதில் 80 வயது கிழவியாக கோவை சரளா தன்னுடைய பேத்திக்கு நடந்த அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார். பக்கபலமாக அஸ்வின் இந்த படத்தில் இருப்பார் போல் தெரிகிறது.

ஆகையால் இந்த வருட இறுதி நாளில் தரமான படம் வெளியாகப் போகிறது என சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரிக்கின்றனர். அதுமட்டுமின்றி வாய வச்சிட்டு சும்மா இல்லாமல் அஸ்வின் சொன்ன ஒரே வார்த்தையால், படுத்து கிடந்த அவருடைய சினிமாகேரியர் செம்பி படத்தின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பிக்கப் போகிறது.