குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய ஆதிரா.. குணசேகரனை எதிர்த்து சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

சன் டிவியின் பிரைம் டைம்ஸ் சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியலில் ஆனது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் சீரியலில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் குணசேகரனின் ஆட்டமானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

குணசேகரின் சகோதரர்களான கதிர் மற்றும் ஞானம் இவர்கள் இருவரும் மட்டுமே குணசேகரன் உடைய அநீதிகளுக்கு துணை போகின்றனர். ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு குடும்பத்தின் தலைவராக இருக்கக்கூடிய குணசேகரனே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது கொஞ்சம் கூட சரியில்லை என்று வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குணசேகரன் எப்படியாவது ஆதிராவின் திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று விடாபிடியாக இருந்து வருகிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மருமகள்கள் மற்றும் குணசேகரனின் தம்பியுமான சக்தியும் கூட ஆதிராவின் மனதிற்கு பிடிக்காத திருமணத்தை நடத்துவதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.

தற்பொழுது அதற்கு ஏற்றார் போல ஒரு பெரும் சம்பவமானது நடந்துள்ளது. குணசேகரன் வீட்டு சம்மந்தியான ரேணுகாவின் அம்மாவின் மூலம் குடும்பத்திற்குள் புது பிரச்சனையானது வெடித்துள்ளது. ஆதிரா உடன் திருமணம் செய்ய போகும் கரிகாலன் உடைய குடும்பத்தை பற்றிய உண்மை நிலவரம் ஆனது தற்பொழுது தெரிந்துள்ளது.

ஏற்கனவே ரேணுகா அம்மாவிற்கு நடந்த பண மோசடி பிரச்சனையில் கரிகாலன் உடைய குடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. மேலும் இந்த சம்பவமானது இவர்களுக்குள் கைகலப்பான நிலையில் தற்பொழுது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தினை எப்படியோ ஆதிரா தெரிந்து கொண்டு குணசேகரனுக்கு எதிராக குடும்பத்திற்குள் புது பிரச்சனையை கிளப்பியுள்ளார்.

மேலும் எப்படியாவது இந்த திருமணத்தை நடக்க விடாமல் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதிரா முழு வீச்சில் இறங்கியுள்ளார். தற்பொழுது அதற்கு ஏற்றார் போல ஒரு துருப்புச் சீட்டு கிடைத்ததை கெட்டியாக பிடித்துக் கொண்டு குணசேகரனிடம்  கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு பிரச்சனையை கிளப்பியுள்ளார். இந்நிலையில் ஆதிராவின் கேள்விகளுக்கு குணசேகரன் எப்படி பதில் சொல்லி பிரச்சனையை சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →