கடந்த சில நாட்களாக மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி சில நாட்களாக ஓய்ந்திருந்தது. தற்போது ஐஸ்வர்யா குறித்து தனுஷ் போட்ட ஒரு டிவிட்டால் மீண்டும் சோசியல் மீடியா பரபரப்பாக மாறியுள்ளது.
விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் வீடியோ ஒன்றை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் அந்த மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தமிழில் பயணி என்ற பெயரில் ஐஸ்வர்யாவின் அப்பா நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
பல வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா வேண்டும் இந்த மியூசிக் வீடியோ மூலம் டைரக்டர் ஆகி இருப்பதால் பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று நடிகர் தனுஷும் இந்த வீடியோவை தன்னுடைய டுவிட்டர் தளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் போட்ட அந்த டிவிட்டை பார்த்து தான் தற்போது சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதில் தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதுதான் தற்போது சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
ஏனென்றால் விவாகரத்து முடிவை அறிவித்த பிறகு கூட ஐஸ்வர்யா தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை இப்போது வரை நீக்கவில்லை. இதைப் பற்றி பலரும் இப்போதுவரை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் நடிகை சமந்தா தனது விவாகரத்தை அறிவித்த பிறகு தன் கணவரின் பெயரை சோசியல் மீடியா பக்கத்திலிருந்து உடனே நீக்கி விட்டார்.
அப்படி இருக்கும்போது ஐஸ்வர்யா இன்னும் தனுஷ் பெயரை நீக்காமல் இருக்கிறார். இதை யோசித்து தனுஷ் தோழி என்று குறிப்பிடாமல் வெறும் ஐஸ்வர்யா என்று கூட வாழ்த்து சொல்லி இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி தனுஷுக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஒரு சில ரசிகர்கள் இது அவரின் வாழ்க்கை அதில் தலையிடுவது நாகரீகம் கிடையாது என்று அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இருப்பினும் தனுஷ் இப்படி ஒரு டிவிட் போடுவதற்கு பதிலாக அவர் போடாமலே இருந்திருக்கலாம் என்பது தான் பலரின் கருத்து.