Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது இந்த வாரம் முல்லையின் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை வைத்து கதை நகர்கிறது. அதாவது எதற்கெடுத்தாலும் கதிருக்கு எல்லா இடத்திலும் கைதான் முதலில் பேசும். அப்படி தான் இவருடைய ஹோட்டலில் பிரச்சினை செய்த ஒருவருடன் அடிதடியில் இறங்கி இருக்கிறார்.
அதனால் அந்த பகையே தீர்ப்பதற்காக கதிர், முல்லையை செக்கப்பிற்காக மருத்துவமனைக்கு போகும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து முல்லையே கீழே தள்ளி விடுகிறார். பிறகு பதட்டத்துடன் இவரை மருத்துவமனைக்கு கதிர் அழைத்து செல்கிறார். இதை தெரிந்த முல்லையின் அம்மா மருத்துவமனைக்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரு கர்ப்பிணி பெண்கள் இருந்தால் ஏதாவது பிரச்சனையாகும் என்று சொன்னேன் கேட்டியா என்று தனத்தின் மீது மொத்த பழியையும் போடுகிறார்.
ஆனாலும் முல்லை மற்றும் கதிரின் முதல் வாரிசு என்பதால் அவர்கள் தவமாக காத்துக் கொண்டிருந்தார் இந்த குழந்தைக்காக. கண்டிப்பாக ஏதும் பிரச்சினை வராது மாதிரி தான் கதை நகரும். அல்லது தனத்திற்கு பிறக்கும் குழந்தை முல்லை இடம் கை மாறலாம். அடுத்ததாக ஐஸ்வர்யா எவ்வளவு பட்டும் திருந்தாமல் இவருடைய பகட்டு வாழ்க்கைக்காக கண்ணன் தவறு மேலே தவறு செய்து வருகிறார்.
அதாவது ஏற்கனவே லஞ்சம் வாங்கிய கண்ணன் மறுபடியும் வட்டியை அடைப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் வாங்கப் போகிறார். இதனால் இவருக்கு மட்டும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது. இதனை அடுத்து ஜீவா எங்கே நம்மை விட்டு மறுபடியும் அந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சேர்ந்து விடுவாரோ என்ற பயம் எப்பொழுதுமே மீனாவின் அப்பாவுக்கு உண்டு.
அதனால் அவ்வப்போது ஜீவாக்கு ஏதாவது ஆடம்பர வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை கொடுத்து வருகிறார். தற்போது இவருக்கு கார் ஒன்றை பரிசாக கொடுக்கப் போகிறார். ஜீவா வேண்டாம் என்று அவர் வாயால் சொன்னாலும் மனதளவில் அவருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. அதனால் பெருசாக மீனாவின் அப்பாவை தடுக்காமல் இருக்கிறார்.
அதாவது தற்போது ஜீவாவின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் சோறு கண்ட இடமே சொர்க்கம் என்ற அளவுக்கு பகட்டு வாழ்க்கையில் கிறங்கி போயிருக்கிறார். போற போக்க பார்த்தா இவங்க ஒன்னும் கதையை முடிக்காமல் எதையாவது வைத்து உருட்டி இன்னும் மாதக்கணக்கில் கொண்டு போவார்கள் என்று தோன்றுகிறது.