அதர்வாவுக்கு சமீபகாலமாக எந்த படமுமே சரியாக போகவில்லை. அதுமட்டுமின்றி தொடர்ந்து அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை, சில சமயங்களில் மது அருந்தி விட்டு வருகிறார் என்றெல்லாம் இவர் மீது புகார்கள் வந்தது.
இதனால் அதர்வா உடைந்து போயிருந்தார். மேலும் இவருக்கு பபட வாய்ப்பு கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் மீண்டும் அதர்வாவுக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதுவும் தனது அப்பா ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டார். ஆனால் தற்போது ரஜினி ஜெயிலர் படம், அடுத்ததாக சிபிச் சக்கரவர்த்தி படம் என கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தனது சொந்த பந்தங்களை வைத்து இயக்கும் படம் ரஜினிக்கு தோல்வியை தந்துள்ளது.
இதனால் ஐஸ்வர்யா தயார் செய்து வைத்திருக்கும் கதையில் ரஜினி நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். இந்த கதையில் தான் தற்போது அதர்வாவை தேர்வு செய்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாருக்கு ரெடி செய்து இருக்கும் கதையில் நடிக்கும் அளவிற்கு அதர்வாவுக்கு லக் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டதால் இந்த படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. கண்டிப்பாக இப்படம் அதர்வாவுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை அப்படியே தக்க வைத்துக் கொண்டால் அதர்வாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் ஐஸ்வர்யாவின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டாருக்காக எழுதப்பட்ட கதையில் அதர்வா நடிக்க உள்ளதால் எப்படி இருக்குமோ என்று யோசனையில் ரசிகர்கள் உள்ளனர்.