Serial: சின்னத்திரையின் கதாநாயகியாக ஜொலித்து வந்த ஆலியா மானசா தற்போது எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் காதலித்து கல்யாணம் ஆன சஞ்சீவி உடன் வெளிநாட்டில் சுற்றி வருகிறார். கப்பல் போன்று ஒரு பெரிய காரில் இவருடைய பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டு வந்ததை சஞ்சீவ் இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
கடந்த வருடம் தான் பெரிய வீடு ஒன்றை கட்டி முடித்து சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இவருடைய வீடு பிரம்மாண்டமாக இருந்தது. அத்துடன் வெப் சீரியஸ் மற்றும் கணவருடன் சேர்ந்து ஆல்பம் சாங் போன்ற விஷயத்தில் பிசியாக இருக்கிறார்.
அப்படிப்பட்ட ஆலியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சின்னத்திரையில் எப்பொழுது வலம் வருவாங்க என்று தொடர்ந்து கேள்விகள் வந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று ஆலியா அவருடைய instaவில் பதிவிட்டது என்னவென்றால் கூடிய சீக்கிரத்தில் சின்னத்திரையில் சந்திப்போம் என்று போட்டிருந்தார்.
ஆனால் சீரியலை பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. முதல் முதலாக ராஜா ராணி சீரியல் மூலம் செம்பா என்ற கேரக்டரில் அறிமுகமானார். இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் இனியா என்ற சீரியல் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தார்..
தற்போது சன் டிவி சீரியலும் இல்லை, விஜய் டிவி சீரியலும் இல்லை என்று குட்பாய் சொல்லிவிட்டு ஜீ தமிழ் சேனலுக்கு தாவி விட்டார். அந்த வகையில் ஆலியா அடுத்து நடிக்க போகும் சேனல் ஜீ தமிழில் தான். இதை அவரே உறுதி செய்து இருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரத்தில் ஜீ தமிழில் இன்னும் புத்தம் புது சீரியலுடன் ஆலியா வரப்போகிறார்.