சினிமாவில் நடிகைகள் எத்தனையோ காதல் செய்தாலும் சரி, கிசுகிசுப்பில் சிக்கினாலும் சரி கடைசியில் தெளிவான முடிவெடுத்து செல்லக்கூடிய ஹீரோயின்களில் ஒருவர்தான் நயன்தாரா. இவரை காதலித்து கடைசியில் கரம் பிடிக்காமல் கழட்டிவிட்ட சாபம் தான் இப்போது இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆக புகழப்படும் நடிகர் ஒருவருக்கு வினையாய் மாறிவிட்டது.
தமிழ் சினிமாவிலிருந்து டான்ஸ் மாஸ்டர் ஆக ஹிந்தி வரை சென்று புகழ் பெற்று, இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் ஆக கொண்டாடப்பட்டார். இவரைப் பார்த்து பொறாமை பட்டவர்கள் தான் அதிகம். என்ன நேரமோ தெரியவில்லை தற்பொழுது மோசமான நிலையில் இருந்து வருகிறார். இயக்குனர் ஆகி நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும் தற்போது படம் இயக்குவதை விட்டுவிட்டார். நடிப்பை மட்டும் தொடர்ந்து வருகிறார்.
ஹிந்தியில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் பழையபடி தமிழுக்கே வந்துவிட்டார். ஆனால் இங்கு கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபகாலமாகவே இதுவரை இவர் நடித்து எந்த படங்களும் ஓடவில்லை. எதற்காக பிரபுதேவா இது மாதிரி படங்களில் நடித்து வருகிறார் என்று அவர்கள் ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.
பெரிய இயக்குனர் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்புடன் இருக்கும் நேரத்தில் இது மாதிரி படங்களை கொடுத்து தோல்வியடைகிறார். தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாக இருக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்ட ராப்’ இந்த படத்தை எஸ்.ஜே. சீனு இயக்குகிறார். டி இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடிக்கிறார். இவர்களுடன் ரியாஸ் கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதி துவங்குகிறது. இந்த படத்தின் பெயரை கேட்டதுமே இந்த படமும் ஓடாது என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.
மீண்டும் பிரபுதேவா பழைய நிலைக்கு வர வேண்டும். ஆனால் இது மாதிரி படங்கள் நடித்தால் வரவே முடியாது என கூறி வருகின்றனர். இவர் நயன்தாராவையே திருமணம் செய்ய வேண்டிய மனிதர். தற்பொழுது வேறு ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து இந்த நிலையில் இருக்கிறார் என பேசி வருகின்றனர்.