Samantha-Amala Paul: இப்போதெல்லாம் ஹீரோயின்கள் திருமணமான வேகத்திலேயே விவாகரத்து என வந்து நிற்கின்றனர். இதில் கடும் அதிர்ச்சியை கொடுத்த விவாகரத்து சம்பவம் என்றால் சமந்தா-நாகா சைத்தன்யா, அமலா பால்-ஏ எல் விஜய் ஆகியோரின் திருமண முறிவு தான்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிகள் விவாகரத்து செய்தது இப்போது வரை அவர்களுடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேபோல் தனுஷ், ஐஸ்வர்யா திருமண முறிவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் தற்போது மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஷீலாவும் இணைந்துள்ளார்.
பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் இப்போது வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். இந்த சூழலில் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் என பதிவிட்டுள்ளார்.
இதுதான் இப்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கூத்து பட்டறை நடத்தி வரும் சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் நடிகைகளின் லட்சியத்திற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கிறது என்ற பேச்சு பரவலாக உள்ளது.
இதுவே ஷீலாவின் இந்த விவாகரத்து முடிவிற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயமே இப்பதான் தெரியும். அதற்குள் விவாகரத்தா என தங்கள் அதிர்ச்சியை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.
