சிங்கப்பெண்ணில் ஆனந்தியை தேடி வரும் அந்த ஆதாரம்.. கர்ப்பத்திற்கு காரணம் மகேஷா?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தேடி அலையும் போதெல்லாம் அவளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

வாழ்க்கையை நினைத்து நொந்து போய் உட்கார்ந்து இருக்கும் வேளையில் அவளை ஆதாரமே தேடி வருகிறது. ஆனந்தியின் முடிவை தெரிந்து கொண்ட லலிதா, அன்பு மற்றும் துளசிக்கு உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.

ஆனந்தியை தேடி வரும் அந்த ஆதாரம்

இதை அன்பு மூலம் மகேஷ் தெரிந்து கொள்கிறான். எப்படியாவது அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைத்து விட வேண்டும் என மகேஷ் விரும்புகிறான்.

இதனால் அன்புவின் வீட்டிற்க்கே சென்று அன்பு ஆனந்தியை திருமணம் செய்தால் மட்டும் தான் சந்தோஷமாக இருப்பான் என லலிதாவிடம் பேசுகிறான்.

ஆனால் துளசியின் அம்மா என் மகளுக்கும் அன்புக்கும் தான் திருமணம் நடக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என சொல்கிறாள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தான் ஆனந்திக்கு அந்த ஆதாரம் கிடைக்க இருக்கிறது.

பார்ட்டி நடந்த வீடியோ இருக்கும் பென் டிரைவ் எப்படியோ குப்பை தொட்டியில் விழுந்து விடுகிறது. இதனால் மித்ரா மற்றும் அவளுடைய தோழிகள் அந்த குப்பைத் தொட்டியை இரவு நேரத்தில் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஆனந்தி பார்த்து விடுகிறாள்.

அதே நேரத்தில் ஹாஸ்டல் வார்டனும் அதை பார்க்கிறார். கண்டிப்பாக ஆனந்தி அந்த பென் டிரைவை பார்த்துவிட்டால் எப்படியாவது மித்ராவிடமிருந்து அதை கைப்பாற்றுவாள்.

மேலும் இந்த பிரச்சனைக்கு மித்ரா தான் காரணம் என ஆனந்திக்கு தெரிந்து விடும். இதன் மூலம் குழந்தைக்கு அப்பா மகேஷா அல்லது அரவிந்தா என ஆனந்தி கண்டுபிடிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →