சிங்கப்பெண்ணில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் ஆனந்தியின் குடும்பம்.. திக்கற்று நிற்கும் அன்பு!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அன்பு விடம் எப்போது சொல்வார் அவளுடைய கஷ்டத்திற்கு எப்போது முடிவு கிடைக்கும் என நேயர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஊர் முன்னிலையில் அன்புக்கு இந்த விஷயம் தெரியும் அளவுக்கு நடந்து விட்டது. மேலும் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுயம்புலிங்கம் ஆனந்தி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று வாதாடுகிறான்.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் ஆனந்தி

உடனே அன்பு யார் என்ன சொன்னாலும் ஆனந்தி தான் என்னுடைய மனைவி, அவளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறான். உடனே அன்புவின் அம்மா லலிதா அதை தடுத்து இந்த விஷயத்தை நான் தான் முடிவு செய்யணும் நீ அல்ல என்று சொல்கிறார்.

இந்த தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்க ஆனந்தி, அன்புவிடம் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் தயவு செய்து போய்விடுங்கள் என்று சொல்கிறாள். ஆனந்தி ஊர் முன்னிலையில் அவமான படும்போது லலிதாவால் அன்பு எதுவுமே செய்ய முடியாமல் திக்குத் தெரியாமல் நிற்கிறான்.

செவரக்கோட்டையில் இருந்து ஆனந்தியை அன்பு தன் மனைவியாக அழைத்து வருகிறானா, அல்லது ஆனந்தியின் குடும்பம் இன்னும் அசிங்கப்பட வேண்டிய சூழ்நிலை வரப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.