அண்ணா : ஒரு பக்கம் ரத்னாவை ஏற்றுக்கொண்ட குடும்பம்.. வீரா வாழ்க்கையில் ஏற்பட்ட ட்விஸ்ட்

Anna : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சுவாரசியமான கதை களங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. சண்முகத்திற்கு ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது. தங்கைகளின் திருமணம் எப்படி நடக்கும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

திடீர் திருப்பம்..

பல நாள் போர்க்களத்துடன் நகர்ந்து கொண்ட இந்த சீரியலின் திருமண கொண்டாட்டம் தற்போது விமர்சையாக நடந்து கொண்டு வருகிறது. இதில் என்னென்ன டுவிஸ்ட் நடக்க போகுது என்று தற்போது பக்கத்தில் பார்ப்போம். வீரா மஸ்ரூம் ரத்னாவிற்கு மெஹந்தி போடும் பங்க்ஷன் பயங்கரமாக நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து இவர்களின் நலங்கு வைக்கும் கொண்டாட்டமும் சண்முகம் நினைத்த மாதிரி நல்லபடியாக முடிந்தது. எப்படியாவது ரத்னாவை அவரது மாமனார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சண்முகத்தின் குறிக்கோளாக இருந்தது.

ரத்னாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனம் விரும்பாத அறிவழகனின் தந்தை. அதை எதிர்த்து ஒரு குடும்பமே போராடி வந்தது. தற்போது அதற்கு வழியில்லாமல் கடைசியில் மனதார ரத்னாவை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டார் அறிவழகனின் தந்தை. இதை யாரும் எதிர்பாராத அளவு ட்விஸ்ட்டை கொடுத்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் யாரும் எதிர்பார்க்காத அளவு ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. அது என்னவென்றால், வீரா திருமணம் மேடையில் உட்கார்ந்து இருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக சிவபாலன் வீரா கழுத்தில் தாலியை கட்டி விட்டான். இது வீரா மற்றும் குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.