சன் டிவியில் அதிக எதிர்பார்ப்பை கொடுக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல். அந்த வகையில் கடந்த கொஞ்ச நாட்களாகவே ஆதிரை திருமணத்தை வைத்து ஒவ்வொருவரும் அவங்களுடைய காரியத்தை சாதிக்க வேண்டும் என்று திட்டத்தை தீட்டி வருகிறார்கள். அதிலும் சொத்து தான் எல்லாம் என்று பணத்தைப் பார்த்து வாயை பிளக்கும் குணசேகரன் பற்றி சொல்லவா செய்ய வேண்டும்.
இவர் செஞ்ச அட்டூழியங்கள் மற்றும் அவமானத்திற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக எஸ் கே ஆர் தம்பி அரசு, ஆதிரை கல்யாணத்தை பகடைக்காயாக யூஸ் பண்ணி குணசேகரனுக்கு செக் வைக்கிறார் என்று தெரிகிறது. இதைப் பற்றி குணசேகரன் வீட்டிற்கு பேச வந்த இவர்கள் ஆதிரை கல்யாணத்திற்காக கதிர் பெயரில் இருக்கும் அந்த மெடிக்கல் கம்பெனியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
இதை கேட்ட கதிர் மிகவும் ஆவேசமாக கோபப்படுகிறார். அதற்கு குணசேகரன் கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்லிவிட்டு அரசுவிடம் நீ மட்டும் வாய் திறந்து பேசிக்கிட்டு இருக்க உன் தம்பி எதுவுமே சொல்ல மாட்டாரா அவர் என்ன நினைக்கிறார் என கேட்கிறார். அதற்கு அருண் என் அண்ணன் கேட்ட மாதிரி அந்த சொத்து எங்களுக்கு வந்தால் கல்யாணம் இல்லை என்றால் இதை பற்றி ஏதும் பேச வேண்டாம் என்று சொல்கிறார். குணசேகரனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதற்கு இவர்கள் தான் சரி என்று தெரிகிறது.
உடனே அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் என்னடா இவன் உண்மையாகவே காதலிக்கவில்லையா சொத்துக்காக தான் காதலிக்கிறானா என்று நினைத்தபடி பார்க்கிறார்கள். பின்பு எஸ் கே ஆர் தம்பிகள் நீங்க பேசி இதைப்பற்றி முடிவெடுங்கள் நாங்கள் கிளம்புகிறோம் என்று போய்விட்டார்கள். அடுத்தபடியாக குணசேகரன் அமைதியாகவே இருந்து யோசிக்கும்போது கதிர் மற்றும் ஞானம் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய். இந்த மாப்பிள்ளை சரிப்பட்டு வராது இதோட நிறுத்திக் கொள்ளலாம் என்று ஞானம் கூறுகிறார்.
அதற்கு குணசேகரன் அப்பத்தாவிடம் அரசு கேட்டது எனக்கு என்னமோ எஸ்கேஆர் க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவன் கௌரவத்தை பெரிதாக நினைக்கக் கூடியவர். அவருக்கு இந்த விஷயம் தெரிந்தால் இதற்கு சம்மதிக்க மாட்டார். அதனால் நீங்கள் அவர் வீட்டுக்கு போய் கலந்து பேசிட்டு வந்து ஒரு முடிவு சொல்லுங்கள் என்று கூறுகிறார். அப்பத்தாவும் இதற்கு சரி என்று கிளம்ப ஆரம்பித்து விட்டார். அடுத்தபடியாக இவரும் ஜனனியும் எஸ்கேஆர் வீட்டிற்கு பேசுவதற்கு போகிறார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் பிளான் போட்டுக் கொடுத்ததே அப்பத்தாவாகத் தான் இருக்கும் என்று ரொம்பவே சஸ்பென்ஸ் ஆக கொண்டு போகிறார்கள் என்பது தெரிகிறது. பின்பு வீட்டிற்கு வந்து அப்பத்தா, குணசேகரன் இடம் இதற்கு எஸ்கேஆர் எந்த வித ஆட்சபனையும் சொல்லவில்லை என்று சொல்லப் போகிறார். இதைக் கேட்ட குணசேகரன் எல்லாத்தையும் எழுதி கொடுத்துவிட்டு இந்த கல்யாணத்தை பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று சொல்கிறார்.
இதற்கு ஆதிரை, கொடுத்தால் என்ன தப்பு என்று கேட்கிறார் உடனே வழக்கம் போல் எகிரி குதிக்கும் கதிர். பிறகு ரேணுகா ரொம்பவும் ஆவேசமாக என்னடா அப்படி என்று அதட்டிக்கொண்டு வருகிறார். ஆனால் குணசேகரன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் நினைப்பில் இதற்கு சம்மதம் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக ஜனனியின் கனவை நிறைவேற்றுவதற்காக சக்தி, வசுவை வைத்து முயற்சி செய்து வருகிறார்.