சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பெண்களின் சுதந்திரத்தை முன்வைத்து தனக்கான உரிமையை நிலை நாட்டும் நோக்கில் கதைக்களம் ஆனது அமைந்துள்ளது .
குடும்பத்தில் உள்ள பெண்கள் படிக்கக்கூடாது திருமணம் இன்னும் பந்தத்தில் இணைந்து நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என்பதே ஆதி குணசேகரன் குடும்பத்தின் லட்சியமாக உள்ளது.அதிலும் குணசேகரன் பள்ளி சென்று கொண்டிருக்கும் தனது மகளை தனக்கு கீழ் இருக்கும் ஒருவருடைய பையனுக்கு மணமுடிக்க நிச்சயதார்த்தம் செய்திருந்தார். பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக நடக்கவிருந்த நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது.
ஆனால் குணசேகரன் கரிகாலனுக்கு ஆதிரையை திருமணம் செய்து கொடுப்பதாக சத்தியம் செய்திருந்தார்.தற்பொழுது இதனை மனதில் வைத்துக் கொண்டு கரிகாலன் நடுரோடு என்றும் கூட பாராமல் ஆதிரையின் கையைப் பிடித்து இழுத்து வம்புக்கு இழுக்கின்றார்.இது ஒரு புறம் இருக்க குடும்பத்தில் உள்ள மருமகள்களின் தைரியத்தை வெளிக்கொண்டுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்பத்தா தனது சொத்தில் 40% பங்கை கையில் வைத்துக்கொண்டு ஆதி குணசேகரனையும் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.குணசேகரன் குடும்பத்தில் சமூகத்தை பொறுத்தவரை பெண்கள் தான் அலுவலகத்தின் நிர்வாக திறனை நிர்வகிக்கின்றனர் என்பதைப் போல போலியான நிகழ்வினை நிகழ்த்தியுள்ளார்.ஆனால் அவர்கள் யாவரும் கம்பெனி பக்கம் கூட சென்றதில்லை.
இதற்கு மாறாக படித்த பெண்களை திருமணம் செய்து வந்து வீட்டில் அடிமை போல் வைத்துள்ளனர்.வீட்டில் உள்ள மூன்று மருமகளிடம் அப்பத்தா உங்கள் பெயரில் கம்பெனி இருக்கின்றது ஆனால் உங்கள் பெயரில் ஒரு அக்கவுண்ட் இருக்கிறதா என்று கேட்டு அவர்களை தூண்டி விடுவது போல் உள்ளது.
இதனை கவனித்துக் கொண்டிருந்த ஆதி குணசேகரனுக்கு கோபம் உச்சிகே சென்றது.அவர் மனதில் 40 சதவீத பங்கை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டம் ஆடுகிறாயா என்று நினைத்துக் கொண்டிருப்பது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது.