Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்றால் அரசி நம்ம கஸ்டடிக்கு வர வேண்டும் என்று சக்திவேல், குமரவேலுக்கு இடம் சொன்னார். அதே நேரத்தில் குமரவேலுக்கு வேறு எங்கேயும் பொண்ணு கிடைக்காததால் பாண்டியன் வீட்டில் மக்காக இருக்கும் அரசியை நம்ப வைத்து கல்யாணம் பண்ணிவிடலாம் என்று காதல் ட்ராமாவை குமரவேலு போட்டார்.
அதன்படி அரசியும் அந்த டிராமாவில் சிக்கிக்கொண்டார். ஆனால் இந்த விஷயம் பாண்டியன் வீட்டுக்கு தெரிந்த நிலையில் அரசுக்கு புத்திமதி சொல்லி வேறொருடன் கல்யாணம் பண்ணுவதற்கு ஏற்பாடுகளை பண்ணி விட்டார். இதனால் ஏமாற்றத்துடன் இருக்கும் குமரவேலு, பாண்டியன் வீட்டில் இருக்கும் சுகன்யாவை வைத்து அடுத்து காய் நகர்த்த ஆரம்பித்து விட்டார்.
சுகன்யாவும் குமரவேலுக்கு உதவி செய்யும் வகையில் அரசியை குமரவேலுவிடம் பேசுவதற்கு தனியாக அனுப்பி வைத்து விட்டார். அப்பொழுது அரசி, குமரவேலுவை சந்தித்து என்னை சந்தோஷமாக வாழ விடு. நான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்கிறார். ஆனால் குமரவேலு உன்னை விடுவதற்காக நான் வர சொல்லவில்லை என்று சொல்லி வில்லத்தனத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.
உடனே அங்கிருந்து அரசி தப்பித்து குமரவேலுவின் நண்பர்களிடம் மாட்டிக் கொண்டார். இதெல்லாம் குமரவேலு போட்ட பிளான் என்று தெரியாமல் அரசி குமரவேலுமிடம் லாக் ஆகிவிட்டார். குமரவேலு அரசியை கூட்டிட்டு போயி கட்டி போட்டு விட்டார். தாலியை எடுத்து கட்ட போகும் பொழுது நீ நினைக்கிற மாதிரி என்னுடைய சுண்டு விரல் கூட உன் மீது படாது, தாலியும் கட்ட மாட்டேன்.
ஆனால் இன்றைக்கு முழுவதும் என்னுடன் தான் இருக்கப் போகிறாய். மறுநாள் நானே உன்னை கூட்டிட்டு உன் குடும்பத்தின் முன் விட்டு இரவு முழுவதும் என்னுடன் இருந்தால் என்று சொல்லப் போகிறேன். அதன் பிறகு அவங்க என்ன முடிவு பண்றாங்களோ அதன்படி நடக்கட்டும் என்று சொல்கிறார். ஆனால் குமரவேலு அரசி கழுத்தில் தாலி கட்டாமல் சொதப்பியதால் அரசி எஸ்கேப் ஆகி விடுவார்.
அந்த வகையில் கோமதி தங்கமயில் மீனா மற்றும் ராஜி அனைவரும் அரசியை காணவில்லை என்று தேடிப் பார்க்கும் பொழுது குமரவேலு இடத்திற்கு அவர்கள் எப்படியும் வந்து விடுவார்கள். அதன்படி குமரவேலுக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்து பூஜை வைத்து விட்டு அரசியை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுவார்கள்.