பாண்டியனுக்காக குமரவேலு வாழ்க்கையை முடித்துவிட்ட அரசி.. சதீஷ் உடன் நடக்க போகும் கல்யாணம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி எங்கே போனார் என்று தெரியாமல் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் குமரவேலு ஏதாவது செய்திருப்பானோ என்று பயமும் வந்துவிட்டது. அந்த நேரத்தில் மாப்பிள்ளை விட்டார்கள் வந்து விட்டார்கள்.

வந்ததும் பொண்ணு எங்கே என்று கேட்டதும் அங்கே இருந்த உறவினர்கள் பொண்ணு எங்கே போனார் என்று தெரியவே இல்லை. இவங்களும் ரொம்ப நேரமாக தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் என்ன நடக்குது என்று எங்களுக்கும் புரியவில்லை என்று கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரர்கள் சொல்கிறார்கள். உடனே சதீஷ் அப்பா, பாண்டியனிடம் என்ன நடக்குது, அரசி எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு பாண்டியன் எதுவும் பதில் சொல்லாமல் இருந்த பொழுது பக்கத்தில் இருப்பவர்கள் குமரவேலுடன் போயிருப்பார் என்று சொல்கிறார்கள். உடனே சதீஷ் அம்மா அந்த குமரவேலு யாரு, என்னதான் நடக்குது என்று சொல்லுங்க என கேட்கிறார். அந்த நேரத்தில் சரவணன் செந்தில் கதிர் மற்றும் பழனிவேலு அனைவரும் குமரவேலுவை கண்டுபிடிப்பதற்காக கிளம்பி விட்டார்கள்.

அப்பொழுது குமரவேலு காரில் வந்து இறங்கினார். உடனே இவர்கள் அனைவரும் குமரவேலுவை அடிக்கிறார்கள். அந்த நேரத்தில் குமரவேல் குடும்பத்தில் இருப்பவர்களும் வெளியே வந்து விடுகிறார்கள். வந்ததும் சக்திவேல், மகனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பேசி அரசியை அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதனால் வாக்குவாதம் ஆன நிலையில் குமரவேலு எல்லாத்தையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு கட்டுக்கதையை எடுத்து விட ஆரம்பிக்கிறார்.

அதாவது உங்க பொண்ணுக்கு நீங்க பார்த்து வச்ச கல்யாணத்தில் விருப்பமில்லை. அதனால் நேற்று இரவு என்னை தேடி வந்து, நான் கல்யாணம் பண்ணினால் உங்களை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று என்னை கட்டிப்பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார். அதனால் அரசியை சமாதானப்படுத்தி இரவு முழுவதும் என்னுடன் வைத்து நல்லபடியாக கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

இதை யாரும் நம்பாத பட்சத்தில் குமரவேலு காரில் இருக்கும் அரசியை வெளியே கூட்டிட்டு வருகிறார். அரசியை பார்த்ததும் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள், அத்துடன் சக்திவேல் சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். பிறகு குமரவேலு வாய்க்கு வந்தபடி அரசி என் மீது வைத்திருந்த காதல் கொஞ்சம் கூட குறையவில்லை. என்னை தவிர அரசிக்கு வேற யாரையும் கல்யாணம் பண்ண இஷ்டமில்லை.

அதனால் என்ன முடிவு எடுக்கணும் அதை நீங்களே முடிவு எடுத்து விடுங்கள் என்று சொல்கிறார். இவ்வளவு பொய் சொல்லி எல்லோரையும் நம்ப வைத்த குமரவேலுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அரிசி தனக்குதானே தாலி கட்டிட்டு வந்து அந்த தாலியை அனைவரிடமும் காட்டுகிறார். இதை எதிர்பார்க்காத மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உரைந்து போய்விட்டார்கள்.

பாவம் சதீஷ்க்கும் இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. ஏனென்றால் சதீஷ், அரசியை லவ் பண்ண ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக குமரவேலு சொன்னதெல்லாம் பொய் என்பதற்கு ஏற்ப அரசி, குமரவேல் வாழ்க்கையை முடித்து விடும் விதமாக நான் வேறு யாரையாவது கல்யாணம் பண்ண செத்துப் போயிருவேன் என்று சொல்லி, கல்யாணம் பண்ணினா என்னதான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம் பிடிச்சாரு.

அதனால் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று அரசி இன்னொரு பக்கம் கதை சொல்கிறார். அதனால் குமரவேலு வேற வழி இல்லாமல் அனைத்து உண்மையையும் சொல்லும் விதமாக நான் அரசி கழுத்தில் தாலி கட்டவில்லை என்று நடந்த விஷயத்தை சொல்லப் போகிறார். அதன் பிறகு அங்கு இருப்பவர்களுக்கு அரசி மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்துவிடும். அடுத்து பாண்டியன் ஆசைப்பட்ட மாதிரி அரசிக்கு சதிஷ் உடன் கல்யாணம் நடந்துவிடும்.