அய்யனார் துணை சீரியலில் தம்பிகளுடன் ஜெயிலுக்கு போகும் சேரன்.. கார்த்திகாவிடம் உதவி கேட்கும் நிலா

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், என்ன நடந்தாலும் பரவாயில்லை, எல்லா விஷயத்திலும் அமைதியாக இருந்தால் கடைசியில் நாம் தான் பலியாடாக சிக்குவோம் என்பதற்கு சேரன் உதாரணமாக இருக்கிறார். அதாவது சேரன் பொறுப்பாக இருந்து தம்பிகளை வளர்த்து பாசத்தைக் காட்டி வருகிறார். ஆனாலும் கடைசியில் நிம்மதி இல்லாமல் கஷ்டத்தை அனுபவிப்பது சேரன் தான்.

அப்படித்தான் தற்போது சேரன் சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திகா ஓடி வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சேரனிடம் புலம்புகிறார். இதை பார்த்த கார்த்திகாவின் அம்மா மற்றும் அப்பா கார்த்திகாவை அடித்ததோடு மட்டுமில்லாமல் சேரணையும் அடித்து ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்கள். சேரன் அடி வாங்கும் பொழுது வாயை திறந்து எதுவும் சொல்லாமல் ஊமையாக நின்றதை பார்த்து நிலா கோபப்பட்டு கார்த்திகா அப்பா அடிப்பதை தடுத்து விடுகிறார்.

இவர்கள் போனதும் நிலா, சேரனை பார்த்து உங்க மீது எந்த தப்பும் இல்லை தானே, அதை வாய் திறந்து அவங்க அடிக்க வரும் பொழுது சொல்ல வேண்டியது தானே என்று சொல்கிறார். அதற்கும் சேரன் எதுவும் சொல்லாமல் வேலைக்கு கிளம்பி விடுகிறார். உடனே நிலா, சோழனுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். சோழன் பாண்டியனுக்கு போன் பண்ணி வீட்டிற்கு வர வைத்து விட்டார்.

அப்படி சோழன் மற்றும் பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் சேரனை கூட்டிட்டு கார்த்திகாவின் அப்பா வீட்டிற்கு போய் சேரனை விட்டு கார்த்திகாவின் அப்பாவே அடிக்க சொல்கிறார்கள். ஆனால் சேரன் அடிக்காமல் நின்றபொழுது கார்த்திகா அப்பா இன்னும் அதிகமாக வாய்க்கு வந்தபடி சேரணையும் குடும்பத்தையும் திட்ட ஆரம்பித்து விட்டார்.

உடனே இது வேலைக்காகாது என்று முடிவு பண்ணிய சோழன் மற்றும் பாண்டியன் கார்த்திகாவின் அப்பாவையும் மாமாவையும் நல்லா அடித்து வெளுத்து விட்டார். ஆனால் இவ்வளவு நடந்ததற்கு முக்கியமான காரணம் கார்த்திகா தான், தற்போது பிரச்சனை வந்த பிறகு கூட வாய் திறந்து எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருப்பது சரியில்லை.

அடுத்ததாக வீட்டிற்கு வந்ததும் சேரனிடம் பல்லவன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திகாவின் அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். அதன்படி சேரன் வீட்டிற்கு வந்த போலீஸ் அண்ணன் தம்பி நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறார்கள். அதாவது தனியாக இருக்கும் பெண்ணிடம் வம்பு பண்ணியதாக சேரன் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்து கொண்ட நிலா இவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் கார்த்திகா நடந்த விஷயத்தை போலீஸ் ஸ்டேஷனில் வந்து சொன்னால் மட்டும்தான் பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியும். அந்த வகையில் நிலா, கார்த்திகாவை சந்தித்து பேசி சேரன் மற்றும் தம்பிகள் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்ல சொல்வார். இதில் கார்த்திகா, சேரன் பக்கம் இருப்பாரா அல்லது அம்மா அப்பா பக்கம் சாய்வாரா என்பதுதான் அடுத்து வரப்போகும் விறுவிறுப்பான கதையாக இருக்கும்.