Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில் நிலா வீட்டை விட்டு போன பிறகு அய்யனார் குடும்பத்தில் இருப்பவர்களை ஊரில் இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசி ராசி இல்லாத குடும்பம் பெண்கள் தங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாத குடும்பம் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். இதை கேட்டு எதுவும் சொல்ல முடியாமல் சேரனும் அமைதியாக போய் விடுகிறார்.
ஆனால் நடேசன் எல்லோரிடமும் கோபப்பட்டு சண்டை போடுகிறார். அத்துடன் அண்ணனும் தவறாக பேசிய நிலையில் கார்த்திகா விஷயத்தை பற்றி பேசி பிளாக்மெயில் பண்ணி வாய் அடைக்கிறார். ஆனால் ஊர் காரங்க சொன்னபடி நிலா அந்த வீட்டில் தங்காமல் போனதால் அவர்கள் சொன்னது உண்மையாகி விட்டது.
இதையெல்லாம் பார்த்து கடுப்பான பல்லவன், நிலா இல்லாததால் ரொம்பவே ஃபீல் பண்ணி அழ ஆரம்பித்து விடுகிறார். அதனால் உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. இன்னொரு பக்கம் சோழன், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக நிலாவின் ஆபீஸுக்கும் ஹாஸ்டலுக்கும் சென்று மன்னிப்பு கேட்கிறார்.
ஆனால் நிலா, சோழன் மீது அதிக அளவில் கோபமாக இருப்பதால் சோழனை மன்னிக்க தயாராக இல்லாமல் திட்டி விட்டு அனுப்பி விடுகிறார். வீட்டிற்கு வந்த சோழன் காய்ச்சலில் இருக்கும் பல்லவனிடம் நிலாவுக்கு போன் பண்ணி பேச சொல்கிறார். ஆனால் பல்லவன் முடியாது என்று சொல்லி தூங்கி விடுகிறார்.
பிறகு பல்லவன், நிலா பிரிவை தாங்க முடியாமல் யாருக்கும் தெரியாமல் நிலாவுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லி அழுது கெஞ்சுகிறார். ஏற்கனவே நிலாவுக்கும் அந்த ஹாஸ்டல் பிடிக்கவில்லை, அய்யனார் வீட்டில் இருப்பவர்களை தான் ஞாபகப்படுத்திக் கொண்டு வருகிறார். அதனால் நிலா பல்லவனுக்காக வீட்டுக்கு வந்து விடுவார்.
இன்னொரு பக்கம் பாண்டியன் மெக்கானிக் ஷாப்பில் இருக்கும் போது வானதி போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது கடைக்கு ஆட்கள் வந்ததால் போனை கட் பண்ணி விட்டு அந்த ஆளிடம் பேசி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே கோவப்பட்ட வானதி மெக்கானிக் ஷாப்புக்கு வந்து பாண்டியன் பேசுகிற நபரை பார்த்து கோபப்படுகிறார்.
இதனால் பாண்டியனிடம் சண்டை போட்டு பிரச்சனை பண்ணுகிறார். இது என்ன வம்பா போச்சு என்று சொல்வதற்கு ஏற்ப சும்மா இருந்த பாண்டியனுக்கு தேவையில்லாமல் வானதி வந்த பிறகு ஒவ்வொரு நாளும் டார்ச்சர் கொடுக்கும் விதமாக சந்தேகப்பட்டு சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார். இதனால் பாண்டியன், நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம் என்று சொல்லி கடை பக்கம் வந்து விடாதே எனத் திட்டி அனுப்புகிறார்.