தாலியை கழட்டி கையில் கொடுத்த நிலா.. சவால் விடும் சோழன்

Ayyanar Thuani Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், நிலாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்த சோழன் மீது கோபப்பட்ட நிலா வீட்டை விட்டு கிளம்பி ஹாஸ்டலில் தங்கினார். நிலா பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத அய்யனார் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சோகத்தில் இருந்தார்கள். ஆனால் பல்லவனுக்கு நிலாவை தேடி காய்ச்சல் வந்து விட்டது.

அதுவும் அண்ணியை போல் தன்னை பார்த்துக்கொள்ள இந்த வீட்டில் யாரும் இல்லை என்று பீல் பண்ணிய பல்லவன் நிலாவுக்கு போன் பண்ணி அழுது எனக்கு காய்ச்சல். ஆனால் யாரும் பார்த்துக்கொள்ள இல்லை என்று சென்டிமென்ட் ஆக பேசிவிட்டார். நிலாவுக்கும் இவர்களை விட்டு பிரிந்து ஹாஸ்டலில் இருக்க முடியவில்லை.

அதனால் ஹாஸ்டலில் இருந்து நிலா, சோழன் வீட்டுக்கு வந்து விடுகிறார். நிலா வருவதை பார்த்து அனைவரும் சந்தோஷப்பட்ட நிலையில் பல்லவன் எனக்காக தான் அண்ணி வந்திருக்காங்க என்று சொல்கிறார். உடனே சோழன் சும்மா இருக்காமல் தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வது போல அவருக்கு அவரை சூனியம் வைத்துக் கொண்டார்.

அந்த வகையில் சோழன் சொன்னது என்னவென்றால் உனக்காக இல்லை என்றாலும் நிலா இங்கே திரும்ப வந்திருப்பாங்க. ஏனென்றால் நான் கட்டின தாலி அவங்க கழுத்தில் இருக்கிறது. அதற்காக நிச்சயம் வந்திருப்பாங்க என்று சோழன் தெனாவட்டாக சொல்ல ஆரம்பித்து விட்டார். இதைக் கேட்ட நிலா கொஞ்சம் கூட யோசிக்காமல் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி சோழன் கையில் கொடுத்து இதை நீங்களே வச்சுக்கோங்க.

இதற்காக நான் ஒன்னும் வரவில்லை அதை புரிஞ்சுக்கோங்க என்று சோழன் முகத்தில் கரியை பூசி விடுகிறார். இதை பார்த்து சேரன் பாண்டியன் பல்லவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததும் கோவப்பட்ட சோழன் தாலிய கழட்டி கொடுத்த பிறகும் நீங்கள் எதுவும் இதைப் பற்றி கேட்காமல் அமைதியாக இருக்கிறீங்க.

இப்போ உங்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன் நிச்சயம் நிலாவே என்னிடம் வந்து இந்த தாலியை என் கழுத்தில் கட்டி விடுங்கள் என்று சொல்வாங்க. நான் சொல்ல வைப்பேன் என்று அனைவரிடமும் சவால் விடுகிறார். ஆனால் சோழன் வாயை மூடிக்கொண்டு கொஞ்சம் அமைதியாக இருந்தாலே நிலாவுக்கு தானாகவே சோழன் மீது காதல் வந்துவிடும். ஆனால் சோழன் ஆர்வக்கோளாறில் ஏதாவது சொல்லப் போய் அதுதான் பிரச்சினையாக முடிகிறது.