Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா எப்படியாவது சோழனிடமிருந்து விவாகரத்து வாங்கி விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அதனால் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி லாயரிடம் பேசுவதற்கு சோழனை வர சொல்லி விடுகிறார். சோழன், நிலா நினைத்த உடனே விவாகரத்து கிடைச்சிடாது நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சேரனிடம் சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
அந்த வகையில் என்னதான் இவர்கள் விவாகரத்து வரை போனாலும் சோழனுக்கு நிலா தான் என்று உறுதியாகிவிட்டது. அடுத்ததாக பாண்டியன் வானதி இருவரும் மெக்கானிக் ஷாப்பில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வானதியின் அண்ணன் பார்த்து கோபப்படுகிறார். உடனே வீட்டிற்கு வந்த வானதி இடம் சண்டை போடும் விதமாக குடும்பத்தில் இருப்பவர்கள் பிரச்சினை பண்ணுகிறார்கள்.
ஆனால் இவர்கள் யார் பேச்சையும் வானதி கேட்காததால் வானதியின் அண்ணன் பாண்டியன் வீட்டிற்கு போய் சண்டை போட போகிறார். ஆனால் பாண்டியன் வீட்டில் இல்லாததால் சேரன் சோழனிடம் பிரச்சனை பண்ணுகிறார். உடனே சோழன் அவர்களை அடித்து சண்டை பெருசாகியதால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடுகிறார்கள்.
பிறகு வீட்டில் அனைவரும் இருக்கும் பொழுது நடேசன், பாண்டியனிடம் யாரையாவது நீ லவ் பண்ணுகிறாய் என்றால் அவளை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடு. உன்னால் தேவையில்லாமல் வீட்டில் பிரச்சினையும் வீட்டிற்கு கெட்ட பெயரும் வருகிறது என்று சொல்கிறார். உடனே யார் வந்து என்ன பிரச்சனை பண்ணார் என்று பாண்டியன் கேட்ட பொழுது நடேசன், நீ காதலிச்ச பொண்ணோட அண்ணன் வந்து தேவையில்லாத வார்த்தைகளை பேசி, கை தகராறு ஆகிவிட்டது என்று சொல்கிறார்.
இதனால் கோபப்படும் பாண்டியன், வானதி வீட்டிற்கு சென்று சண்டை போடுவார். அப்பொழுது வானதி, எனக்கு பாண்டியன் தான் முக்கியம் என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பி பாண்டியனை கல்யாணம் பண்ணி விடுவார். இவர்களுடைய காதலுக்கும் கல்யாணத்துக்கும் உதவி செய்யும் வகையில் சோழன் தான் முன்னணியில் நின்று கல்யாணத்தை நடத்தி வைப்பார்.