Ayyanar Thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா முதல் நாள் ஆபிசுக்கு வந்து வேலை செய்வதால் ஆபீஸில் இருப்பவர்கள் நிலாவை வரவேற்கும் விதமாக கேக் கட் பண்ணி வரவேற்கிறார்கள். அப்பொழுது அங்கே அந்த கம்பெனியின் இன்னொரு ஓனராக வரும் நபர் தான் பாக்கியாவின் மகன் கேரக்டரில் நடித்த செழியன். இதில் இவருடைய கேரக்டர் நிலாவுக்கு ஜோடியாகவும் சோழனுக்கு போட்டியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அடுத்தபடியாக நிலா வேலை பார்க்கும் பொழுது பல்லவன் மற்றும் சேரன் போன் பண்ணி விசாரிக்கிறார்கள். அடுத்து சோழன் போன் பண்ணி நான் ஆபீசுக்கு கூப்பிட வரேன் என்று சொல்கிறார். ஆனால் நிலா, நீங்க வரக்கூடாது. நானே வந்து விடுவேன் என்று சொல்கிறார். அப்பொழுது நிலாவுடன் வேலை பார்க்கும் நபர் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா, இங்கே எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு நிலா எனக்கு கல்யாணம் ஆகவில்லை, இங்கே சொந்தக்காரங்க வீட்டில் தங்கி இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதனை அடுத்து ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு நிலாவும் ஆபீஸ் தோழியும் பேசிக் கொண்டு வரும் பொழுது பல்லவனின் அம்மாவை நிலா சந்திக்கிறார். அப்பொழுது இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று யோசனையுடனே வீட்டுக்கு வருகிறார்.
வந்தவுடன் கண்டுபிடித்து விடுகிறார் நம்ம பார்த்தது பல்லவனின் அம்மா என்று. உடனே நடேசன் இடம் பல்லவன் அம்மா இங்கே தான் இருக்கிறார்களா, அப்படி என்றால் ஏன் பல்லவனிடம் அம்மாவை பற்றி சொல்லாமல் இருக்கிறீர்கள். இன்றைக்கு நான் அவர்களை பார்த்தேன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதற்கு நடேசன் எந்தவித பதிலும் சொல்லாமல் எஸ்கேப் ஆகி விடுகிறார்.
அந்த வகையில் பல்லவனின் அம்மா பற்றிய ரகசியம் கூடிய சீக்கிரத்தில் வெளிவந்துவிடும். இதனை அடுத்து நிலா வேலை பார்க்கும் ஆபீஸில் பாஸ் ஆக இருக்கும் ராகவுடன் நிலா நட்பு ரீதியாக பழகப் போகிறார். இதனால் சோழன் வாழ்க்கையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கப்போகிறது.