Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா ஆபீசுக்கு சென்று சோழன் பிரச்சினை பண்ணியதால் வீட்டுக்கு வந்து நிலா வாய்க்கு வந்தபடி சோழனை திட்டி விடுகிறார். சோழன் மீது தான் தவறு இருக்கிறது என்று வீட்டில் இருப்பவர்களும் சொன்னதால் கோபத்துடன் வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு மறுநாள் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என்று பல்லவன் மூலம் நிலா சோழனுக்கு போன் பண்ணி வீட்டிற்கு கூப்பிடுகிறார். அப்பொழுது சோழன் வீட்டிற்கு வரும் நேரத்தில் எதிர்க்கே வந்து ஒரு பைக் மோதி விடுகிறது. உடனே சோழன் பார்த்து வரமாட்டியா ராங் ரூட்ல தான் வருவியா என்று சண்டை போடும் பொழுது அந்த நபர் போலீஸிடம் புகார் கொடுத்து விடுகிறார்.
உடனே சோழன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கொண்டு சேரனுக்கு போன் பண்ணி தகவலை சொல்லி விடுகிறார். அந்த வகையில் எப்படியும் பணம் கொடுத்து தான் சோழனை வெளியே கூட்டிட்டு வர முடியும் என்று சோழன் வைத்திருந்த பணத்தையும் சேரன் பணத்தையும் பாண்டியன் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு நிலாவையும் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனைவரும் வருகிறார்கள்.
அங்கே வந்ததும் போலீஸ் சோழனை வெளியே விடாமல் கோர்ட்டில் போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார். கடைசியில் பேசி சமரசம் ஆகிய நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தால் கேஸ் வாபஸ் வாங்கி விடுகிறேன் என்று அந்த பைக் நபர் சொல்லிவிடுகிறார்.
அதன்பிறகு எல்லா பணத்தையும் சேர்த்து போலீஸிடம் கொடுத்து சோழனை வெளியே கூப்பிடுகிறார்கள். அப்படி சோழன் வரும்பொழுது போலீஸ் சோழனிடமிருந்த லைசன்ஸ் வாங்கி ஒரு மாசத்துக்கு நீ வண்டியை தொடக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்.
இதற்கிடையில் சோழன் கோபத்தில் பேசியதால் அனைவரும் முன்னாடியும் போலீஸ் சோழனை கன்னத்தில் அடித்து விட்டது. நிலா முன்னாடி அடிவாங்கிட்டோமே என்று சோழன் கடுப்பாகி வீட்டிற்கு வருகிறார். வந்ததும் அந்த கோபத்தை காட்டும் விதமாக பாண்டியனை பேசவிடாமல் பாண்டியன் கன்னத்தில் அடித்து விடுகிறார்.
பிறகு சோழன் ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று எல்லோரும் அமைதியாகிய நிலையில் சோழன் அவருடைய பேக்கில் வைத்திருந்த பணத்தை போய் பார்க்கிறார். உடனே சோழன், நான் வைத்திருந்த பணத்தை யார் எடுத்தார் என்று கேட்ட பொழுது பாண்டியன் அந்த பணத்தை எல்லாம் வைத்து தான் உன்னை வெளியே கூட்டிட்டு வந்தோம் என்று சொல்கிறார்.
அதற்கு சோழன் அந்த பணத்தை உன்னை யார் எடுக்கச் சொன்னார், அதை நான் எதற்காக வைத்தேன் என்று தெரியுமா என கோபப்பட்டு பாண்டியனை அடிக்க ஆரம்பித்து சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
பாண்டியன் பணம் கொடுக்கவில்லை என்றால் நீ ஸ்டேஷனில் தான் இருக்கணும், பரவாலையா என்று சொன்ன பொழுது சண்டை பெருசாகிவிட்டது. இதனால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. அத்துடன் சோழனால் இனி வேலைக்கு போக முடியாது என்பதை விட நிலாவுக்கு பாத்ரூம் கட்ட முடியாது, பைக் வாங்க முடியாது என்ற கடுப்பு தான் அதிகமாக இருக்கிறது.