Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், சோழனுக்கு போன் பண்ணி பார்த்து சுவிட்ச் ஆப் என்பதால் டென்ஷனாக இருக்கிறார். உடனே சேரன் என்னாச்சு என்று கேட்ட பொழுது பாண்டியன் நடந்த விஷயத்தை சொல்கிறார்.
அத்துடன் மாமனார் போட்ட சவாலையும் சொல்லிய நிலையில் பல்லவன், சோழன் அண்ணாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தில் அழ ஆரம்பித்து விடுகிறார். பிறகு சேரன், நிலாவுக்கு போன் பண்ணி வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அந்த வகையில் அப்பா கொஞ்சம் நகையும் பணத்தையும் கொடுத்து பிசினஸ் விஷயமாக ஒருவரிடம் கொடுக்க சொல்லி சோழனை அனுப்பி வைத்தார்.
ஆனால் சோழன் அங்கே இன்னும் போகாததால் இங்கே இருப்பவர்கள் அனைவரும் சோழன் தான் பணத்தை எடுத்துட்டு போய் விட்டான் என்று சொல்கிறார்கள், எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என நிலா சொல்கிறார். உடனே சேரன், அவன் அப்படியெல்லாம் செய்யக்கூடியவன் இல்லை, உனக்கு தெரியாதா என்று கேட்கிறார். அதற்கு நிலா எனக்கு சோழனை பற்றி தெரியும், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் வீட்டில் இருப்பவர்கள் இதை வைத்து பெரிய பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள், இதற்கெல்லாம் சோழன் வீட்டுக்கு வந்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்கிறார். உடனே நடேசன் அவன் அன்னைக்கு வந்து கூட்டிட்டு போகும் பொழுது நான் நினைத்தேன், ஏதாவது ஒரு வில்லங்கம் நடக்கும் என்று. மகளை தன் வீட்டில் வைத்துக் கொள்வதற்காக சோழனை என்ன வேணும்னாலும் பண்ணி இருப்பான் என்று சொல்லி பயம் காட்டி விடுகிறார்.
உடனே சோழனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணிய பாண்டியன் சேரன் பல்லவன், அனைவரும் தேடுவதற்கு போய்விடுகிறார்கள். அதே நேரத்தில் சோழனை கட்டிப்போட்ட இடத்திற்கு மனோகர் தாஸ் வந்து விடுகிறார்கள். வந்ததும் அந்த கும்பலிடம் இருந்து பணத்தையும் நகையும் வாங்கிக் கொண்டு அடியாட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து சோழன் உயிரை எடுப்பதற்கு பேரம் பேசி விடுகிறார்கள்.
அப்பொழுது தாசுக்கு, சோழன் மீது இருந்த கடுப்பினால் அவனை அடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு முகமூடி போட்டு சோழனை அடித்து துன்புறுத்தி விடுகிறார். இதனால் சோழனுக்கு இந்த மாதிரி வன்மத்துடன் இருப்பது மனோகர் மற்றும் தாஸ் தான். அதனால் இந்த வேலை எல்லாம் அவர்கள் தான் பண்ணி இருப்பாங்க என்று தெரிந்து கொண்டார்.
கடைசியில் சோழனை காப்பாற்றிய பிறகு அய்யனார் குடும்பத்தில் இருக்கும் உடன்பிறப்புகள் அனைவரும் சேர்ந்து மனோகர் தாஸ்க்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள்.