சேரனுக்கு ஜோடியாக வந்த சாந்தனி.. வானதியை தலைமுழுகிய பாண்டியன்

Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா சோழன் வீட்டுக்கு வந்த பிறகு வேலை தேடும் விஷயத்தில் முழுமையாக இறங்கிவிட்டார். அதே மாதிரி சேரனும் சோழனும் வேலைக்கு கிளம்பிய நேரத்தில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிடுகிறது. இதனால் சேரன், பாண்டியனை வீட்டில் இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.

ஆனால் நிலா நான் வீட்டில் சும்மா தானே இருக்கிறேன், நான் பார்க்கிறேன். நீங்கள் வேலைக்கு போங்க என்று சேரனை வேலைக்கு அனுப்பி வைக்கிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று நம்மளும் வீட்டில் இருந்து கொள்ளலாம் என சோழன் எனக்கும் அடிவாங்கியது எல்லாம் வலிக்குது. நானும் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக் கொள்கிறேன் என்று நிலாவிடம் சொல்லி வீட்டில் இருக்கிறார்.

அதன் பிறகு பாண்டியனுக்கு காய்ச்சல் சரியாகவில்லை என்று நிலா, நடேஷனிடம் மருந்து எழுதி கொடுத்து வாங்கிட்டு வருகிறீர்களா என்று கேட்கிறார். உடனே நடேசன் வாங்கிட்டு வந்து நிலாவிடம் கொடுக்கிறார். நிலா அந்த மருந்தை வாங்கிய பிறகு இரண்டாவது மனைவி பற்றி கேள்வி கேட்கிறார். அதற்கு நடேசன் எதையும் சொல்லாமல் சமாளிக்கிறார்.

உடனே நிலா, நீங்களே எல்லா விஷயத்தையும் என்னிடம் சொல்வீங்க என சவால் விடும் அளவிற்கு நடேஷனிடம் கூறிவிடுகிறார். அடுத்து பாண்டியன் மெக்கானிக் ஷாப் போனதும் வானதி அனுப்பிய மெசேஜ் எல்லாம் பார்க்கிறார். ஆனாலும் பாண்டியனுக்கு வானதி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாததால் டென்ஷனாகவே இருக்கிறார்.

அத்துடன் மெக்கானிக் ஷாப்புக்கு வந்த வானதி என்னவென்று கேள்வி கேட்காமல் கூட பாண்டியனே வரிசையாக திட்ட ஆரம்பித்து விடுகிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், வானதியை திட்டிவிட்டு இங்கு இருந்து போய்விடு என அடிக்காத குறையாக துரத்தி விடுகிறார்.

உடனே வானதி இனி உன் மூஞ்சில் கூட முழிக்க மாட்டேன் என்று கோபமாக போய்விடுகிறார். இவர்களுடைய சண்டையை பார்க்கும் பொழுது இவர்கள் காதல் அவ்வளவு தான் என்று சொல்வதற்கு ஏற்ப கேள்விக்குறியாக நிற்கிறது.

அடுத்ததாக சேரன் வேலை பார்க்கும் இடத்திற்கு அணிசின் தங்கை சாந்தனி சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறார். வழக்கம் போல் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு சேரன் சாந்தனியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்படியே இவர்களுடைய காதல் கைகூடி விடும், அடுத்து சேரன் சாந்தினி கல்யாணம்தான் நடக்கப் போகிறது.