நிலாவிடம் ஆதாரத்துடன் நிரூபித்த சோழன்.. மனோகரின் முகத்திரையை கிழித்த பாண்டியன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் தந்திரமாக சேரனுக்கு போன் பண்ணி இருக்கும் இடத்தை சொல்லிவிடுகிறார். ஆனால் சோழன் போன் பண்ணி பேசினதை கண்டுபிடித்த அடியாட்கள் தாஸ்க்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்கிறார். உடனே கோவப்பட்ட தாஸ் அந்த இடத்திலிருந்து சோழனை வேறு இடத்திற்கு மாற்ற சொல்லிவிட்டார்.

அப்படி சோழனை மாற்றி வேறொரு இடத்திற்கு காரில் கொண்டு போகும் பொழுது அந்த கார் பைக்கில் வந்த பாண்டியனை லேசாக தட்டி விடுகிறது. இதனால் கோபப்பட்ட சேரன் அவர்களிடம் சண்டை போடும்போது காருக்குள் இருந்த சோழனை பல்லவன் பார்த்து விடுகிறார். உடனே பல்லவன், காருக்குள் சோழன் அண்ணா இருக்கிறான் என்று சொல்லிய பொழுது அந்த காரை பாலோவ் பண்ணும் விதமாக பாண்டியன் சேரன் கிளம்பி விட்டார்கள்.

அந்த வகையில் காரை வழிமறைத்து அடியாட்களிடம் சண்டை போட்டு சோழனை காப்பாற்றி விடுகிறார்கள். அத்துடன் யார் இந்த வேலையை பண்ண சொன்னார் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள். பிறகு மறுநாள் சோழன் கெத்தாக மனோகர் வீட்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் யார் என்பதை சரியாக கவனிக்காத நிலாவின் அம்மா யார் என்று கேட்கிறார்.

உடனே சோழன் திரும்பிப் பார்த்த நிலையில் நிலாவின் அம்மா பயத்தில் வீட்டுக்குள் சென்று மனோகரையும் தாசையும் கூப்பிடுகிறார். அப்பொழுது சோழன் கெத்தாக வீட்டுக்குள் நுழைந்து நிற்கிறார். பிறகு எல்லோரும் வந்த நிலையில் தாஸ், சோழனை பார்த்து பணத்தையும் நகையும் திருடிட்டு போயிட்டு இப்பொழுது ஏன் வந்திருக்கிறாய் என்று திட்டுகிறார்.

ஆனால் மனோகர், தாசை பொறுமையாக இருக்க சொல்லிவிட்டு நல்லவர் மாதிரி சோழனிடம் வந்துட்டீங்களா மாப்பிள்ளை, என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். உடனே நிலா, உங்களுக்கு எத்தனை முறை கால் பண்ணேன், ஏன் எதுவும் சொல்லாமல் நிற்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சோழன், பணத்தை எடுத்துட்டு போகும் பொழுது யாரோ தெரியாத நான்கு பேர் வந்து என்னிடமிருந்த பணத்தையும் நகையும் எடுத்துட்டு போய் என்னையும் கட்டி போட்டு விட்டார்கள்.

பிறகு அவர்களிடம் இருந்து நான் தப்பித்து இங்கே வந்துவிட்டேன் என்று சொல்கிறார். உடனே மனோகர் நல்லவேளை நாம்தான் இந்த வேலை பண்ணனும் என்று இவனுக்கு தெரியவில்லை என்று சந்தோஷப்பட்டு கொண்டார். அதன் பிறகும் தாஸ் நம்பிக்கை இல்லாமல் சோழனிடம் சண்டை போட்ட பொழுது சோழன், பாண்டியன் உள்ளே வா என்று கூப்பிடுகிறார்.

அப்படி பாண்டியன் வீட்டுக்குள் வரும்பொழுது அந்த அடியாட்களையும் சேர்த்து கூட்டிட்டு வருகிறார். அவருடன் சேர்ந்து பல்லவன் சேரனும் வந்துவிடுகிறார்கள். பிறகு பல்லவன், இதற்கெல்லாம் காரணம் உங்க அப்பா தான். இவங்களை அனுப்பி அண்ணனிடமிருந்து பணத்தையும் நகையும் எடுத்துட்டு போக சொல்லி அண்ணனை கட்டிப்போட்டு பழியை தூக்கி சோழன் அண்ணா மீது போட்டு உங்களை நிரந்தரமாக இங்க வைத்துக்கொள்ள போட்ட பிளான் என்று ஆதாரத்துடன் நிரூபித்து விட்டார்.

உண்மையெல்லாம் தெரிந்து கொண்ட நிலா, மனோகரையும் குடும்பத்தையும் காரி துப்பும் வகையில் வேண்டாம் என்று உதறிவிட்டு சோழன் குடும்பத்துடன் நிம்மதியான வாழ்க்கை வாழ கிளம்பி விட்டார். இனி மனோகர் என்ன நினைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப நிலா மனசில் சோழன் குடும்பம் நிரந்தரமான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது.