Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் என்ற ஒரு பழமொழி உண்டு. அது போல தான் சோழன் வீட்டில் நிலா ஒரு கெஸ்ட் ஆக தங்கி இருந்தார். ஆனால் இது தெரியாத மனோகர், சோழனிடமிருந்து நிலாவை பிரிக்க வேண்டும் என்று பிளான் பண்ணினார். ஆனால் அந்த பிளான் தோற்றுப் போய் நிலாவும் சோழனும் ஒன்று சேரும் வகையில் அமைந்துவிட்டது.
அதாவது தன்னுடைய சந்தோஷத்திற்காக எல்லா அவமானத்தையும் சந்தித்து பொறுமையாக இருந்த சோழன் மீது நிலாவுக்கு பாசம் வர ஆரம்பித்து விட்டது. அதனால் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பொழுது சோழன் மட்டும் ஏன் இல்லை என்று நிலா கேட்கிறார். அத்துடன் சோழன் நேரமாகியும் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று வாசலிலே நின்று காத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் சோழன் காரில் வந்துவிட்டார் என்று கார் சத்தத்தை கேட்டதும் நிலா முகத்தில் சந்தோஷம் வர ஆரம்பித்துவிட்டது. அதே சந்தோஷத்துடன் வாசலுக்கு வந்து சோழனிடம் என்னாச்சு ஏன் இவ்வளவு நேரம் என்று அக்கறையாக கேட்கிறார். நிலாவின் பாசத்தையும் அக்கறையும் பார்த்த பாண்டியனும் பல்லவனும் நக்கல் அடிக்கிறார்கள்.
அத்துடன் நிலவின் தவிப்பை பாண்டியன் புரிந்து கொண்டு அதை சோழனிடம் சொல்லி நிலாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் உன் மீது நம்பிக்கை வர ஆரம்பித்துவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள் என்று பாண்டியன், சோழனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார். சோழன் எதிர்பார்த்தபடி நிலா சோழன் வலையில் விழுந்து விட்டார்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக சோழன் தன்னுடைய கணவர் என்ற நினைப்பு நிலாவுக்கு வந்துவிடும். அடுத்ததாக சேரன் சாந்தினி காதல் கல்யாணமும் வரப்போகிறது. இவர்களைத் தொடர்ந்து பாண்டியன் வானதி காதலும் கல்யாணத்தில் போய் முடிய போகிறது. தற்போது அய்யனார் துணை சீரியல்தான் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பவர்களின் மனதை வென்று விட்டது.