Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டான் என்று சேரன் பாண்டியன் பல்லவன் தெரிந்து கொண்டார்கள். அதனால் எப்படியாவது சோழனை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் தேட ஆரம்பித்து விட்டார்கள். அப்படி பாண்டியன் பதட்டமாக தேடிக் கொண்டிருக்கும் பொழுது வானதி போன் பண்ணுகிறார்.
பாண்டியன் பேச முடியாத சூழ்நிலையில் இருப்பதால் போனை கட் பண்ணி விடுகிறார். ஆனால் வானதி திரும்பத் திரும்ப கூப்பிட்டதால் பாண்டியன் திட்டி விட்டு ஃபோனை கட் பண்ணி விடுகிறார். பிறகு 3 பேரும் தேடிக் கொண்டிருக்கும் பொழுது கிடைக்கவே இல்லை என்று என்ன பண்ணலாம் என்ன பேசிக் கொண்டிருக்கும் போது மறுபடியும் வானதி, பாண்டியனுக்கு போன் பண்ணுகிறார்.
இதனால் பாண்டியன், வானதியை திட்டி விட்டு போனை தூக்கி எறிந்து விடுகிறார். பிறகு பல்லவன் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய் என்று போனை எடுத்துப் பார்க்கும்பொழுது போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுகிறது. பிறகு மறுபடியும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சோழன் யாருக்கும் தெரியாமல் கால் கீழ் போன் இருப்பதை பார்த்து பாண்டியனுக்கு கால் பண்ணுகிறார்.
ஆனால் பாண்டியன் போன் ஸ்விட்ச் ஆஃப் என்பதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் சேரன் நம்பரை யோசித்துப் பார்த்து சேரனுக்கு கால் பண்ணுகிறார். சேரன் வேற யாரோ என்று போனை கட் பண்ணி கட் பண்ணி விடுகிறார். பிறகு பாண்டியன் எடுத்து தான் பேசுங்களேன், யார் என்று பார்க்கலாம் என்று கேட்ட பொழுது சேரன் போன் எடுத்ததும் சோழன் பேச ஆரம்பித்து விடுகிறார்.
அப்பொழுது சோழன் நடந்ததை சொல்லிவிட்டு திருவண்ணாமலையில் இருக்கும் இடத்தையும் சொல்லிவிடுகிறார். உடனே சோழன் இருக்கும் இடத்திற்கு சென்று சோழனை காப்பாற்றலாம் என்று மூன்று பெரும் கிளம்பி விட்டார்கள். இதற்கு இடையில் நிலாவிடம் சண்டை போடும் விதமாக நிலாவின் அம்மா, சோழனை பற்றி தவறாக பேசுகிறார்.
அப்பொழுது அங்கே வந்த நிலாவின் அப்பா மற்றும் அண்ணன், சோழன் தான் பணத்தையும் நகையும் எடுத்துட்டு போயிருக்கிறான் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனாலும் எங்கே போயிருக்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி இந்த மாதிரி ஒரு பையன் உனக்கு தேவையில்லை. விவாகரத்துக்கு நான் அப்ளை பண்ணுகிறேன்.
நீ அவனை விட்டுவிட்டு என்னுடைய பெண்ணாக இங்கே இருந்து உன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள் என்று செண்டிமெண்ட் டிராமாவை போட்டு நிலாவை குழப்பி விடுகிறார்கள். நிலா இதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். அடுத்ததாக சோழன் போனில் பேசிய விஷயத்தை தெரிந்து கொண்ட ஆட்கள் சோழனை அங்கிருந்து வேறு இடத்திற்கு கூட்டிட்டு போகலாம் என்று காரில் கூட்டிட்டு போகும் பொழுது பல்லவன் பார்த்து விடுகிறார்.
பிறகு பல்லவன் பாண்டியன் சேரன் மூன்று பேரும் சேர்ந்து காரை பாலோ பண்ணி காரை நிப்பாட்டி விடுகிறார்கள். அதன் பிறகு சோழனை காப்பாற்றி யார் இந்த மாதிரி பண்ண சொன்னார் என்ற விஷயத்தையும் தெரிந்து கொண்டார்கள். பிறகு இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து மனோகருக்கு ஆப்பு வைக்கும் விதமாக அவர்களுடைய வீட்டிற்கு சென்று சம்பவம் செய்யப் போகிறார்கள்.