சிங்கப்பெண்ணில் மகேஷ் தான் மாப்பிள்ளை என முடிவெடுத்த அழகப்பன்.. உண்மையை உடைப்பாளா ஆனந்தி?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியிருக்கிறது. எந்த ஒரு விஷயம் நடந்து விடக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த விஷயம் நடந்து விட்டது.

சிங்க பெண்ணே சீரியல் ஆனந்தி என்ற மையப்புள்ளியில் ஆரம்பித்து இப்போது முக்கோண காதல் முடிவாக வந்து நிற்கிறது.

ஒரு பக்கம் லலிதா ஆனந்தியை அன்புவின் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் வார்டன் மகேஷ் காக செவரக்கோட்டை சென்று கல்யாணத்திற்கு தேதி குறித்து விட்டார்.

உண்மையை உடைப்பாளா ஆனந்தி?

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அதைத்தான் மித்ரா செய்து விட்டாள்.

சும்மா இருந்த சுயம்புலிங்கத்தை சொறிந்து விட்டு அவன் நேராக ஆனந்தியின் வீட்டிற்கு சென்று தாறுமாறாக பேசுகிறான்.

கோபத்தில் அழகப்பன் அவன் முன்னிலையில் மகேஷ் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை என்று அவன் தோள் மீது கை போடுகிறார்.

மகேஷுக்கு இந்த விஷயம் சொல்ல முடியாத சந்தோஷத்தை கொடுக்கிறது. இது குறித்து அழகப்பன் ஆனந்திக்கு போன் பண்ணுகிறார். அப்பா முடிவெடுத்த பிறகு அதை மறுத்து அன்புவின் காதலை வெளியில் சொல்கிறாளா ஆனந்தி என பொறுத்திருந்து பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment