ஓவராக ஆடிய ஈஸ்வரியை வெளியே போக சொன்ன பாக்கியா.. இனியாவுக்காக ராதிகாவை நிராகரித்த கோபிக்கு கிடைத்த தண்டனை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யா பிறந்த நாளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி மற்றும் பாக்யாவுக்கு இடையே சண்டை வருகிறது. அதில் கோபி, பாக்கியாவுக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை இனி யாரும் பேச வேண்டாம் என்று சொல்லி ஈஸ்வரியை சமாதானப்படுத்துகிறார். அத்துடன் பாக்யாவிடமும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையே முடித்து விடுகிறார்.

இருந்தாலும் பாக்கியா இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த நிலையில் கோபி இடம் உங்களுக்கு உடம்பு சரியாகும் வரை தான் நான் இங்கு இருப்பதற்கு சம்மதம் தெரிவித்திருந்தேன். ஆனால் நீங்கள் இப்படியே இங்கே இருந்தால் அது சரிப்பட்டு வராது. அதனால் நீங்கள் எப்பொழுது இந்த வீட்டை விட்டு வெளியே கிளம்புவீங்க என்று கேட்கிறார்.

உடனே கோபி அதற்கு தான் நான் மாசம் மாசம் வீட்டு வாடகை தருகிறேன் என்று சொல்கிறார். அப்பொழுது பாக்யா வீட்டு வாடகை கேட்டது ராதிகா இங்கே இருந்தாங்க என்பதற்காக தான். ஆனால் அவங்களை இல்லாத போது நீங்க ஏன் இங்கே இருக்க வேண்டும். உங்களுக்கு உடம்பும் சரியாகிவிட்டது அதனால் நீங்கள் தனியாக போய் இருங்கள் என்று சொல்கிறார்.

இதை கேட்ட ஈஸ்வரி, பாக்யாவிடம் சண்டை போடுகிறார். அவன் ஏன் வெளியே போக வேண்டும் அவருடைய அம்மா பிள்ளைகள் எல்லாம் இங்கே இருக்கும் பொழுது அவனும் இங்கே தான் இருப்பான் என்று சொல்கிறார். அதற்கு பாக்கியம், உங்களுக்கு உங்க பையனை தேடும் பொழுது போய் பாருங்கள். அதே மாதிரி கோபிக்கும் பிள்ளைகள் ஞாபகம் வந்தால் தாராளமாக வந்து பார்த்துட்டு போகட்டும்.

அதற்கு எந்தவித மறுப்பும் நான் சொல்ல மாட்டேன், ஆனால் அதற்காக இங்கே இருந்திட முடியாது என்று பாக்கியா கரராக பேசுகிறார். உடனே கோபி, எனக்கு இன்னும் இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் அதற்குள் நான் சில வேலைகளை முடித்துவிட்டு இங்கு இருந்து கிளம்புகிறேன் என்று பாக்யாவிடம் சொல்கிறார். பாக்யாவும் சரி என்று சொல்லி எவ்வளவு சீக்கிரமாக இங்கே இருந்து கிளம்ப முடியுமோ கிளம்பிடுங்க என்று சொல்லி போய் விடுகிறார்.

ஆனால் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, பாக்யாவிடம் நீ ஏன் கோபியை வெளியே அனுப்புவதில் குறியாக இருக்கிறாய். உனக்கு கோபியை பிடிக்கவில்லை சேர விருப்பமில்லை என்று தெரிந்து உடன் நான் வேற எந்த பேச்சும் பேசவில்லை. ஆனாலும் எதற்காக என் பையனை வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறாய். உனக்கு பணம் காசு வசதி எல்லாம் வந்ததும் கூட திமிரும் வந்துவிட்டது என்று திட்டுகிறார்.

உடனே பாக்கியா நான் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லை உங்க பையன் கூட இருக்க ஆசைப்பட்டீங்க என்றால் நீங்களும் தாராளமாக வீட்டை விட்டு வெளியே போய் உங்க பையனுடன் இருக்கலாம் என்று ஈஸ்வரிடம் கூறிவிட்டார். இதை எதிர்பார்க்காத ஈஸ்வரி எதுவும் செல்ல முடியாமல் அமைதியாக நிற்கிறார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த இனியாவும் அம்மா சொல்வது சரிதான.

அம்மாக்கு பிடிக்கவில்லை என்றால் அப்பா தனியாகவே இருக்கட்டும் ஒரே வீட்டில் இருந்து ஏன் சண்டை போட வேண்டும் என்று சொல்கிறார். இனியா இப்படி சொல்வதைக் கேட்டு அங்கு இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியாக்கி நிலையில் ஈஸ்வரி நீயும் உங்க அம்மா கூட சேர்ந்துக்கிட்டு கோபியை வெளியே அனுப்புவதற்கு முடிவு பண்ணிட்டியா என்று கோபமாக பேசி விடுகிறார்.

இப்படிப்பட்ட இந்த இனியாவுக்காக தான் ராதிகா வேண்டாம் என்று இதை வீட்டில் இருக்க கோபி ஆசைப்பட்டார். ஆனால் தற்போது இனியாவுக்கு மெச்சூரிட்டி வயசு வந்துவிட்டது, தனக்குன்னு ஒரு ஆளு இருக்கிறார் என்ற தெனாவட்டில் கோபி தனியாக போனாலும் பரவாயில்லை என்று முடிவெடுக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த முடிவை அப்பொழுதே எடுத்திருந்தால் ராதிகா கோபி பிரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. இனியா பேச்சை கேட்டு ராதிகாவை நிராகரித்ததற்கு கோபிக்கு இதுதான் சரியான தண்டனை.

Leave a Comment