இனியாவை வைத்து சுதாகருக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் பாக்கியா.. சகுனி வேலை பார்த்த ஈஸ்வரி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவை வீட்டிலேயே முடக்க வேண்டும் என நினைக்கும் ஈஸ்வரி குடும்பத்திற்குள் சகுனி வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். அதாவது பாக்கியா தற்போது ஹோட்டலில் பிஸியாக வேலை பார்ப்பதால் வீட்டு வேலையை அமிர்தா பார்க்கும் படியாக அமைந்து விட்டது. அதனால் எல்லோருக்கும் சமைத்து கொடுத்ததை ஈஸ்வரி குறை சொல்லி அமிர்தாவை நோகடித்து விட்டார்.

இதனால் எழில், அமிர்தாவை சமாதானப்படுத்தி பேசுகிறார். அப்படி பேசும் பொழுது ஈஸ்வரி அங்கே வந்து மறுபடியும் பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார். இதனை சமாளிக்க முடியாத எழில், அமிர்தா வீட்டு வேலையும் எல்லா வேலையும் பார்த்து வந்தாலும் நீங்கள் திட்டறீங்க, ஆனால் எந்த வேலையும் பார்க்காமல் ஜெனி சும்மா தான் இருக்காங்க. அவங்களை எதுவும் நீங்க கேட்க மாட்டீங்க என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

எழில் இப்படி சொல்லும் பொழுது செழியன் அதைக் கேட்டு விடுகிறார். பிறகு ஈஸ்வரி யார் வேலை பார்க்கணும் வேலை பார்க்க கூடாது என்று உங்க அம்மா இருந்து தான் அதை சொல்ல வேண்டும். ஆனால் உங்க அம்மா எனக்கு என்ன என்று இஷ்டத்துக்கு வெளிய ஊர் சுத்திட்டு வந்தால் வீட்டில் இப்படித்தான் பிரச்சினை வரும் என்று சொல்லி அப்படியே திசை திருப்பி விடுகிறார்.

பிறகு ரூம்குள் போன செழியன், ஜெனி இடம் எழில் சொன்ன விஷயத்தை சொல்கிறார். உடனே ஜெனியும் வீடு முன்னாடி மாதிரி சந்தோசமாக ஒற்றுமையாக இல்லை. இதற்கு பேசாமல் நாம் நம் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று இரண்டு பேரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். நல்லா இருந்த ஒற்றுமையான குடும்பத்தில் சகுனி வேலையை பார்த்து விரிசல் ஏற்படுத்தும் விதமாக ஈஸ்வரி கலகத்தை மூட்டி வருகிறார்.

அடுத்ததாக செல்வி மற்றும் பாக்கியா ஹோட்டலில் இருக்கும் பொழுது இனியா வருகிறார். அப்பொழுது இனியா குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பாக்யாவிடம் பேசுகிறார். பாக்யா எனக்கு நீ ஒரு உதவி பண்ண வேண்டும் என்று நினைத்தால் என்னுடைய இரண்டு ஹோட்டலும் உன் மாமனார் கையில் இருக்கிறது. அதை நீ நிர்வாகம் செய்து மேலே கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த வகையில் பாக்யா சொன்னபடி இனியா அந்த பிசினஸை எடுத்து நடத்தி சுதாகர் மூஞ்சில் கரியை பூச போகிறார். அடுத்ததாக பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே கோபி வருகிறார். அப்படி வந்ததும் இங்கே ஒரு வேலை விஷயமாக வந்தேன், அப்படியே சாப்பிட்டு போகலாம் என்று உன்னுடைய ஹோட்டலுக்கு வந்ததாக பாக்யாவிடம் சொல்கிறார்.

உடனே பாக்யா கோபிக்கு பரிமாற ஆரம்பிக்கும் பொழுது கோபி, நீ சாப்பிட்டியா பாக்யா என்று கேட்கிறார். தற்போது இவர்களுடைய புரிதல் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி வருகிறது என்பதற்கு ஏற்ப பாக்கியவை கோபி நன்றாக புரிந்து கொண்டு சப்போர்ட் பண்ணி வருகிறார்.