Bigg Boss Azeem – Vikraman: பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டு வின்னரான விக்ரமனை பற்றி தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. லண்டனில் சட்ட ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் கிருபா முனுசாமி என்னும் பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் தன்னை காதலிப்பது போல் நடித்து, தன்னிடம் பணம் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதாக இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.
அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விக்ரமன், நேற்று தன்னுடைய டுவிட்டரில் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல் இந்த கதைக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளது, இதில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான் என்று ஒரு பதிவை போட்டு அதனுடன் கிருபா முனுசாமி எழுதிய கடிதம் மற்றும் அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி அனுப்பிய வங்கிக் காசோலையின் புகைப்படம் போன்றவற்றை பகிர்ந்திருந்தார்.
ஒரு பக்கம் விக்ரமனுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம், ஒரு பக்கம் அவருடைய உண்மை முகம் வெளியே வந்துவிட்டது என்று அவருக்கு எதிராக கேள்வி கேட்கும் கூட்டம் என ஆளாளுக்கு சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை சொல்லி வரும் நிலையில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் சரியான நேரம் பார்த்து விக்ரமனை சீண்டி இருக்கிறார்.
பிக் பாஸ் போட்டியின் போது அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் தான் கடும் போட்டி இருந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னும் இவர்கள் இருவருடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதற்கேற்றவாறு இவர்களுடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். நேர்மையானவர், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர் என்று பெயர் பெற்ற விக்ரமன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்ததும் இதுதான் சமயம் என்று அசீம் போட்ட பதிவு இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.
2,91,000 பாலோவர்ஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கும் அசீம் நேற்று, அவர் கைதட்டுவது போல் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதனுடைய கேப்ஷனில் நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும் 🔥( என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும் ) என பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் தங்களுடைய கமெண்டில் விக்ரமனுக்கு சரியான பதிலடியை, சரியான நேரம் பார்த்து கொடுத்திருக்கிறார் அசீம் என சொல்லி வருகின்றனர். மேலும் விக்ரமன் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்கு இப்போது அவருடைய ஆதரவாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும், மற்ற நேரங்களில் அவ்வளவு பேசிய அவருடைய ஆதரவாளர்கள் இப்பொழுது மௌனம் காப்பது ஏன் என்று கிண்டலடித்தும் வருகின்றனர்.