ரெட் கார்டு நிறைய இருக்கு, அரண்டு போன மாயா, பூர்ணிமா.. ஆண்டவரே இதைத்தான் எதிர்பார்த்தோம்

BB7 Tamil Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ பார்வையாளர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கு, குறைவில்லாத அளவுக்கு செம்மையாக விருந்து வைத்து விட்டார் கமல். பிரதீப் வெளியேறுவதற்குப் பிறகு நெட்டிசன்கள் செய்த அத்தனை கலவரங்களையும், பார்த்துவிட்டு தான் கமல் வந்திருக்கிறார் என்பது ப்ரோமோவை பார்க்கும் போதே தெரிகிறது.

முதல் ப்ரோமோவில் கமல் தீர்ப்பு மற்றும் தீர்வு என பேசியது பிரதீப் சர்ச்சைக்கான பதிலாகத்தான் தெரிந்தது. கமல் இன்று ஒரு முடிவோடு தான் இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. குற்றம் சுமத்தியவர்கள், நல்லவர்களா என்ற ஒரு கேள்வியிலேயே ஏஜென்ட் டீமுக்கு மரண அடி விழ போகிறதன் முன்னோட்டம் தான். அடுத்தடுத்து வெளியான ப்ரோமோக்கள் பார்வையாளர்களை குளிர செய்திருக்கிறது.

மூன்றாவது ப்ரோமோவில் கமல், விசித்ராவிடம் உங்களுக்கு ஏதாவது சொல்ல இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கு விசித்ரா, பிரதீப்பிற்கு போனவாரம் ரெட் கார்டு கொடுத்து அனுப்பினீர்கள், கடந்த வாரம் முழுக்க எனக்கும் அதே போன்று தான் நடந்தது. அதற்கு என்ன பதில், பெண்களுக்கு இங்க பாதுகாப்பு இல்லையா என கமலிடம் கேட்டார்.

பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு, நீங்க ஏகப்பட்ட ரெட் கார்டும் இருக்கிறது என பதில் சொன்னார். கமல் சொல்வதைக் கேட்டு மாயா மற்றும் பூர்ணிமா முகத்தில் ஈ ஆடவில்லை. விசித்ரா போன வாரம் முழுக்க என்னை மரியாதை இல்லாமல் பேசினார்கள், அதற்கு சாரி கூட இல்லையா என்று கமலிடம் கேட்டார். அதற்கு கமல், அவங்க சொல்ற சாரி உண்மை என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார்.

மேலும் பார்வையாளர்களை பார்த்து அவர்கள் சொல்லும் சாரியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொன்னார். அதற்கு சாட்சியாக கமல் பிக் பாஸ் இடம் குறும்படமும் போட சொல்கிறார். கமல் ஏன் இப்படி சொன்னார் என்று எல்லோருக்குமே தெரியும். பெரிய பிரச்சனை நடந்த அன்று இரவு மாயா அண்ட் கோ பேசிய பேச்சு தான் அந்த குறும்படத்திற்கு காரணம்.

மாயா அன்று இரவு ரொம்ப நக்கலாக கமல் வந்து எது கேட்டாலும் நான் சாரி என்று சொல்லி விடுவேன் என கூலாக பேசியிருந்தார். அவருடன் சேர்ந்து பூர்ணிமாவும் ஒத்து ஊதி இருந்தார். இந்த ப்ரோமோவை பார்த்த பிறகு, கமல் குறும்படம் போடும்பொழுது ஏஜென்ட் டீமின் ரியாக்ஷன்களை பார்க்க ஆடியன்ஸ்கள் காத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →