அமீர்-பாவனிக்கு அடுத்து விஷால்-அன்ஷிதா தான்.. இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் உறுதியான காதல்!

Bigg Boss: ஊர் குருவி பருந்தாகாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் காதல் கன்டென்ட்.

அதிக பெண் ரசிகைகளை கொண்ட போட்டியாளர்கள் தன்னுடைய இருப்புக்காக உள்ளே வரும் ஒரு போட்டியாளரை தேர்வு செய்து முழுக்க காதல் விளையாட்டுகளை அரங்கேற்றுவார்.

வெளியே வந்த பிறகு அந்த காதல் காணாமல் போய்விடும். ஓவியா- ஆரவ், கவின்- லாஸ்லியா போன்றவர்கள் எல்லாம் இந்த லிஸ்ட் தான்.

போஸ்ட் மூலம் உறுதியான காதல்!

இதில் விதிவிலக்காக இருப்பது அமீர் மற்றும் பாவனி தான். அவர்களை அடுத்து விஷால் மற்றும் அன்ஷிதா வீட்டிற்கு வெளியே ஜோடிகள் ஆகி விடுவார்கள் போல.

தர்ஷிகா விஷாலை காதலித்ததும், விஷால் அன்ஷிதாவை காதலித்ததும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்கள் யாருமே இதை வீட்டிற்குள் வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு தற்போது எல்லா நிகழ்ச்சிகளிலும் விஷால் மற்றும் அன்ஷிதா ஜோடியாக தான் சுற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் அன்ஷிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விஷாலுடன் அன்ஷிதா இருக்கும் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் எடிட் செய்ததை பகிர்ந்திருக்கிறார்.

Vishal Anshitha
Vishal Anshitha
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment