பாக்யா: இனியா குடும்பத்துக்கு உதவி செய்யும் ஆகாஷ்.. கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் சுதாகர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நித்தேஷை கொலை பண்ணியது, நான் தான் என்று சொன்னதால் இனி தலைமறைவாக இருக்க வேண்டாம் என்று பாக்யா செழியன் இனியா எழில் அனைவரும் ஊருக்கு கிளம்பி விட்டார்கள். வந்ததும் ஈஸ்வரியை சமாதானப்படுத்திவிட்டு ஜெயிலில் இருக்கும் கோபியை பார்ப்பதற்கு பாக்யா செழியன் எழில் போகிறார்கள்.

அங்கே அடி வாங்கிய கோபியை பார்த்ததும் எழில் செழியன் ரொம்பவே பீல் பண்ணி அழ ஆரம்பித்து விட்டார்கள். பிறகு கோபி, இதெல்லாம் நம்மளுடைய குழந்தைக்காக தான். அதனால் நம்ம வீட்டுக்கு போலீஸ் வந்து கேள்வி கேட்பாங்க. எல்லோரும் சேர்ந்து நான் தான் கொலை பண்ணினேன் என்று சொன்னால் தான் இனியா இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறி சொல்கிறார்.

அதன்படி வீட்டிற்கு வந்து ஈஸ்வரி இடமும் இப்படி சொல்ல வேண்டும் என்று பாக்கியா சொல்கிறார். அப்பொழுது ஈஸ்வரி அழுது கொண்டிருக்கும் பொழுது போலீஸ் வந்து விசாரிக்கிறார்கள். அதில் கோபி சொன்னபடி நித்திஷ் மற்றும் கோபிக்கு வாக்குவாதம் வந்த நிலையில் கோபி தள்ளிவிட்டு நித்தேஷ் இறந்துவிட்டார் என்று சொல்லிவிடுகிறார்கள்.

உடனே போலீஸ் விசாரணை முடியும் வரை நீங்கள் யாரும் வெளியூர் போக கூடாது என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். அதன் பிறகு நடந்த உண்மையை அங்கே இருக்கும் ஆகாஷ் இடம் இனியா சொல்லி விடுகிறார். அடுத்ததாக எழில் ரெஸ்டாரன்ட் பக்கத்தில் இருக்கும் பழனிச்சாமியின் காபி ஷாப்பில் இருக்கும் சிசிடிவி ஆதாரத்தை எடுத்துட்டு வருகிறார்.

எடுத்துட்டு வந்து வீட்டில் இருப்பவர்கள் முன் போட்டு பார்க்கிறார்கள், அங்கே ஆகாஷ் இருப்பதால் இனியாவுக்கு போன் பண்ணிய நேரமும் நித்தேஷை பார்த்துவிட்டு டென்ஷனாக சுதாகர் இருந்ததும் ஒன்று போல தான் இருக்கிறது. சுதாகர் தான் நித்தேஷை ஏதோ பண்ணி இருக்கணும். அதை சமாளிப்பதற்காக அந்த இடத்திற்கு இனியாவே வரவழைத்து இருக்கிறார் என்று ஆகாஷ் எல்லாத்தையும் கண்டுபிடித்து சொல்லிவிடுகிறார்.

இதன்படி விசாரணை பண்ணிய பொழுது சுதாகர் மீதுதான் தவறு இருக்கிறது என்று தெரிய வரப்போகிறது. அந்த வகையில் இந்த பிரச்சினையிலிருந்து இனிய மற்றும் கோபி தப்பித்துக் கொள்வார்கள்.