இண்டர்வியூவுக்கு சென்ற பாக்யா.. ஒரே நேரத்தில் இத்தனை ஆடர்ரா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மசாலா பொடி, கெரியர் சாப்பாடு என இவற்றை மட்டும் செய்தால் குடும்ப செலவை சமாளிக்க முடியாது என பிஸினஸை விரிவுபடுத்தும் நோக்கத்தில் திருமண மண்டபத்தின் ஆர்டரை எடுப்பதற்காக இன்டர்வியூவுக்கு பாக்யா சென்றிருக்கிறார்.

அங்கு சென்று பார்த்தால் பெரிய பெரிய தொழிலதிபர்கள் பாக்யாவிற்கு போட்டியாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் அனைவரும் ஆண்கள். பாக்யா ஒருவர் மட்டும் தான் பெண்ணாக இருக்கிறார். இதனால் கொஞ்சம் பதட்டமடைந்த பாக்யா எழிலுக்கு போன் செய்து பேசுகிறார்.

ஒரே நேரத்தில் 5 கல்யாணத்திற்கு சாப்பாடுகளை தயார் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட பெரிய பெரிய ஆர்டர்களை எல்லாம் பாக்யா சமாளிப்பாரா என்றும், பணபலமும் ஆள்பலமும் அதற்கு இருக்க வேண்டும் என்றும் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

இருப்பினும் இந்த ஆர்டரை கொடுக்கும் நபர் ஏற்கனவே பாக்யாவிற்கு பரிச்சயமானவர் தான். பாக்யா வீடுவீடாக டிபன் கேரியர் சாப்பாடு கொடுப்பதால், தற்போது இன்டர்வியூ நடத்துபவர் பாக்யாவின் சாப்பாடு ஏற்கனவே சாப்பிட்டவர் தான். இதற்காக பாக்யாவைஅ வர் வீட்டிற்கே வர வைத்து பாராட்டியும் இருக்கிறார்.

ஏற்கனவே ஒருமுறை ஒரு ஆர்டரையும் பாக்யாவிற்கு கொடுத்து, அதை வெற்றிகரமாக செய்ததற்காக அவருக்கு நல்ல லாபம் வரும் அளவுக்கு பணம் கொடுத்திருக்கிறார். ஆகையால் அவர் மட்டும் நிச்சயம் பாக்யாவை பார்த்தால் இந்த ஆர்டரை தூக்கி கொடுத்து விடுவார் .

ஆனால் இதற்கு முன்பு 15 நிமிடத்திற்குள் ஏதாவது ஒரு உணவை சமைத்துக் கொடுத்து, அதில் யார் திறமையாளர்களோ அவர்களுக்குத்தான் இந்த ஆர்டரை கொடுக்கப் போகிறார். அதிலும் பாக்யா வெற்றி பெற்று திருமண மண்டபத்தின் ஆர்டரை கைப்பற்றப் போகிறார்.