பாக்கியா, பழனிச்சாமி நிச்சயதார்த்தமா? என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் என தடுக்க நினைக்கும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது காமெடி ட்ராக்கில் கோபியை வைத்து கதை நகர்ந்து வருகிறது. அதாவது பழனிச்சாமிக்கு பொண்ணு பார்த்து திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் பாக்கியா. இதற்கு உதவி செய்யும் கோபியின் ஒட்டு மொத்த குடும்பம்.

அதற்காக பழனிச்சாமியை போன் பண்ணி வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரச் சொல்கிறார். இதை தவறாக புரிந்து கொண்ட கோபி அடுத்து எல்லா விஷயத்தையும் வைத்து பாக்கியா பழனிச்சாமிக்கு தான் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்று நினைக்கிறார். அதற்கேற்ற மாதிரி அந்த வீட்டில் இருப்பவர்களும் நடந்து கொள்கிறார்கள்.

அதாவது இனியாவிடம் கோபி இங்கே எதற்கு பழனிச்சாமி வரவேண்டும் என்று கேட்க, அதற்கு இங்கே தானே பொண்ணு இருக்கு அப்போ அவங்க இங்க தானே வரணும் என்று சொல்கிறார். இதைக் கேட்டு வயிற்றெரிச்சல் படுகிறார் கோபி. ஆனா ஒன்னு மட்டும் புரியலை இவர் ஏன் இந்த அளவுக்கு தவிக்கணும்.

இவர் மனசுல இன்னும் பாக்கியா மனைவி என்கிற நினைப்பு இருக்கிறதா அல்லது இப்பதான் பாக்கியா மீது லவ் அதிகமாக இருக்கிறதா. பக்கத்துல இருக்கும்போது பாக்கியாவின் அருமை தெரியவில்லை இப்போ விலகிப் போனதும் ரொம்ப பாசம் பொங்கி வருகிறது. அதனால் தான் எப்படியாவது இந்த நிச்சயதார்த்தத்தை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அதற்காக என்னென்ன சித்து விளையாட்டு பண்ணப் போகிறாரோ. இதற்கிடையில் இவருக்கு சந்திரமுகி மாதிரி ராதிகா என்ற மனைவி இருக்கிறார் என்பதை மறந்து விட்டார் என்னமோ. ராதிகா பாவம் அவரும் இவரை நம்பி ஏமாந்து பைத்தியம் போல் அலைய போகிறார். ஆக மொத்தத்துல கோபி, ராதிகா மற்றும் பாக்கியாவின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார்.

மேலும் அந்த வீட்டில் இருப்பவர்கள் கோபி கேட்கும்படி பழனிச்சாமி பார்த்திருக்கும் பெண்ணை நினைத்து அவர்கள் பர்பெக்ட் மேட்ச், நல்ல ஜோடி என்று புகழ்ந்து வருகிறார்கள். ஆனால் அதைக் கேட்ட கோபி, ஏன் இந்த குடும்பத்தில் எல்லாத்துக்கும் என்ன ஆச்சு புத்திக்கிட்டு போய் அலையறாங்க.? பாக்கியாவிற்கு வேறு கல்யாணம் பண்ண இவங்க ஏன் மும்மரமாக இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்.