Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் இன்று கிளைமாக்ஸ் காட்சியை கொண்டு வந்து சுபம் போட்டு விட்டார்கள். ஆரம்பத்தில் இந்த சீரியல் விரும்பி பார்க்கப்பட்டு வந்தாலும், போகப்போக கதையே இல்லாமல் உருட்டிக் கொண்டு வந்தார்கள்.
முக்கியமாக எல்லோருக்கும் ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷனும் என்ற கதைப்படி ஒவ்வொரு கேரக்டரும் அமைந்தது. இதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பாக்கியலட்சுமி இறுதியிலும் கோபியுடன் பாக்கியலட்சுமி சேர்ந்து விடுவாரோ என்ற கேள்விக்குறி இருந்தது.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாக்கியா தனியாக வாழ்வதே நிரந்தரமானது. எனக்கு இப்படி இருக்கிற தான் பிடித்திருக்கிறது என்று சொல்லி கோபியை விட்டு விலகி இருப்பதற்கு தயாராகிவிட்டார்.
ஆனாலும் கோபிக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் போய் பார்ப்பேன். எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கோபி வருவார். இப்படிப்பட்ட உறவு எங்களுக்கு இருந்தால் போதும் மற்றபடி கணவன் மனைவி உறவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அந்த வகையில் கோபி அவருடைய கடந்த காலத்தை யோசித்துப் பார்க்கும் விதமாக ஒவ்வொரு விஷயங்களையும் திருப்பி பார்த்து ஒரு குட்டி கதையை சொல்லி முடித்து விட்டார். இதே மாதிரி ராதிகா, செல்வி மற்றும் பாக்கியலட்சுமி என அனைவரும் அவர்கள் கடந்து வந்த பாதைகளை எல்லாம் சொல்கிறார்கள்.
இதில் ஒரு அழகான நினைவுகளையும், நிஜ வாழ்க்கையில் வரும் கஷ்ட நஷ்டங்களையும் சொல்லி புரிய வைத்து விட்டார்கள். அத்துடன் தன்னம்பிக்கையுடன் போராட நினைக்கும் யாரையும், யாராலையும் தடுக்க முடியாது வெற்றி நிச்சயம் என்று சொல்வதற்கு ஏற்ற உதாரணத்துடன் பாக்கியலட்சுமி சீரியலுக்கு சுபம் போட்டு விட்டார்கள்.