Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட ஒளிபரப்பாகி ஆயிரம் எபிசோடுக்கு மேல் தாண்டி வருகிறது. இதில் கதை ட்ராக் புதுசாக இல்லாமல் அரைத் மாவை அரைத்து இழுத்து அடித்துக் கொண்டு வருவதால் பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை கொண்டு வருகிறார்கள். அத்துடன் இந்த சீரியலை கலாய்த்து கிண்டல் அடிக்கும் விதமாக தான் கதைகளும் அமைந்திருக்கிறது.
அதனால்யே மக்கள் கமெண்ட்ஸ் மூலம் இந்த நாடகத்தை முடித்துவிட்டு இதற்கு பதிலாக புதுசாக வேறு ஒரு சீரியலை கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனாலும் இந்த சீரியல் முடிக்காமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.
அதாவது பெண்கள் தன்னம்பிக்கையுடன் சுயமாக நின்னு ஜெயித்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் போது அவர்களுக்கு வரும் பிரச்சினைகளும் குடும்பத்தில் இருந்து நெருக்கடியையும் எப்படி அவர்கள் தாண்டி முன்னேறுகிறார்கள் என்பதை காட்டும் விதமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கதையை முடிக்காமல் கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் நினைப்பது போல் சில பேருக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்றாலும் பல பேர் இந்த கதையை கொண்டாடும் விதமாக இதுதான் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது. குடும்ப வாழ்க்கை சரியில்லை என்று சொந்தக்காலில் நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகளை கொடுத்து அவர்களை முடக்க வேண்டும் என்று புதுசு புதுசாக இன்னல்கள் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் அப்படி வரும் பொழுது துவண்டு போய் இருக்காமல் அடுத்த நிமிஷமே எழுந்து போராட ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம். அப்படியே நமக்கு வெற்றி கிடைத்து விட்டால் யாரெல்லாம் கிண்டலும் கேலியும் பண்ணினார்களோ அவர்கள் முன்னாடி தலைநிமிர்ந்து மரியாதையுடன் வாழலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக பாக்யாவின் கதை தற்போது இருக்கிறது. அதனால் தான் இந்த நாடகத்தை முடிக்காமல் கொண்டு வருகிறார்கள்.