ஈஸ்வரி கேட்டதற்கு பாக்கியா எடுக்கப் போகும் முடிவு.. சைலன்டாக எஸ்கேப் ஆகிய ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், போலீஸ் இடம் பாக்கியா சிசிடிவி ஆதாரத்தை காட்டினாலும் சுதாகர் தான் கொலை பண்ணியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அதனால் நீங்க சொல்றபடி சுதாகரை அரெஸ்ட் பண்ண முடியாது. வேண்டுமென்றால் நான் கூப்பிட்டு விசாரிக்கிறேன் என்று சொல்கிறார். உடனே எழில் உங்களுக்கு தேவையான ஆதாரத்தை நான் கூட்டிட்டு வந்து விட்டேன் என்று சொல்லி சுதாகர் கூட இருந்த நபரை கூட்டிட்டு வந்து விடுகிறார்.

பிறகு அந்த நபரிடம் போலீஸ் கேட்ட பொழுது அவர் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். அதாவது சுதாகர் வாங்கிய ரெஸ்டாரண்டில் வைத்து நித்தீஷ் போ**தை பொருளை எடுத்துட்டு சப்ளை பண்ணுவதற்கு தயாரானார். இதை பார்த்த சுதாகர் பையனுக்கு வார்னிங் கொடுத்தார். ஆனால் அவர் எதுவும் கேட்காததால் வாய் தகராறு ஆகி பிறகு கை தகராறு ஆகிவிட்டது.

இதனால் கோபத்துடன் சுதாகர், நித்தீஷ் தலையில் அடித்து விடுகிறார். உடனே அவர் இருந்துவிட்டார் என்று நினைத்த பொழுது இந்த பழியை தூக்கி இனியா மீது போடலாம் என்று இனியா வுக்கு போன் பண்ணி அந்த ரெஸ்டாரண்டுக்கு வர வைத்தார். இனிய வந்ததும் நித்திசை பார்த்து பேச ஆரம்பித்தார், உடனே நித்தேசும் பேசிய பொழுது நித்தீஷ் சாகவில்லை என்று சுதாகருக்கு ஃபோன் பண்ணி சொன்னேன்.

பிறகு சுதாகர் நீ அங்கே இருந்து என்ன நடக்குது பாரு என சொல்லிவிட்டார். அதன் பிறகு இனியாவிற்கும் நித்தேசுக்கும் பிரச்சனை ஆரம்பமானது. உடனே இனியா, நித்தேஷை தள்ளிவிட்டு கிளம்ப பார்த்தார். அப்பொழுது மயங்கி விழுந்த நித்தேஷ் மூச்சுப் பேச்சு இல்லையே என்று தெரிந்ததும் இனியா கொலை பண்ணி விட்டேன் என்று பாக்யாவுக்கு போன் பண்ணி வரவழைத்தார்.

பாக்யாவும் வந்து பார்க்கும் பொழுது நித்திஷ் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த பொழுது நித்தீஷ் இறந்துவிட்டார் என்று முடிவு பண்ணி அவர்கள் அங்கிருந்து போய் விட்டார்கள். பிறகு அந்த இடத்திற்கு சுதாகர் வந்த பொழுது நித்தேஷ் கண்விழித்து பேச ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த சுதாகர் இவனுக்கு ரொம்பவே ஆயுசு கெட்டியாக இருக்கிறது. ஆனாலும் இவன் உயிரோட இருந்தால் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும்.

அதனால் நித்திஷ் கதையை முடித்துவிடு என்று என்னை கொலை பண்ண சொல்லிவிட்டார். நானும் அவர் சொன்னதை கேட்டு நித்தேஷை கொலை பண்ணிட்டேன் என்று நடந்த உண்மையை சுதாகரின் ஆல் ஒன்னு விடாமல் வாக்குமூலம் கொடுத்து விடுகிறார். இதன் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் சுதாகரை போலீஸ் தேடி வருகிறது. அத்துடன் கோபி மீது எந்த தவறும் இல்லை என்று வெளியே வந்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து பிரச்சினைகள் எல்லாம் முடிந்து விட்டதால் கலெக்டர் ஆன ஆகாசுக்கும் இனியாவுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது. உடனே தனியாக இருக்கும் கோபியுடன் பாக்யா சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி சொல்கிறார். இதைக்கேட்டு ராதிகா எதுவும் சொல்லாமல் சைலண்டாக அங்கிருந்து போய் விடுகிறார். அந்த வகையில் பாக்கியா எடுக்கப் போகும் முடிவு கோபிக்கு ஒரு நல்ல தோழியாக கடைசிவரை இருப்பேன் என்று சொல்லப் போகிறார்.