ஆட்டோவிலேயே குடும்பம் நடத்தும் பாரதி கண்ணம்மா.. வர வர உங்க அக்கப்போரு தாங்கல

பாரதி கண்ணம்மா இயக்குனர் சமீபகாலமாக பொது பிரச்சினை பற்றி பேசுவதில் இறங்கிவிட்டார். இந்த வாரம் சென்னை மழை நீரில் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை ஒரு ரொமான்ஸ் காட்சியை வைத்து கூறினார்.

அதற்கு அடுத்ததாக சென்னையின் மற்றொரு பிரச்சனையை மீண்டும் ஒரு ரொமான்ஸ் காட்சிகயை வைத்து கூறியுள்ளார். அதாவது கண்ணம்மா தன் குழந்தையை பார்க்க ஸ்கூலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் பாரதியும் ஹேமாவை பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறார்.

வழக்கமாக கண்ணம்மாவை அழைத்து செல்லும் ஆட்டோகாரர் பாரதியும், கண்ணம்மாவும் எப்படியாவது ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதியின் காரை ஸ்டார்ட் ஆகாமல் செய்து விடுகிறார். இதனால் பாரதி தன்னுடைய ஆட்டோவில் தான் வர வேண்டும் என்று திட்டம் போடுகிறார்.

அவர் நினைத்தது போல பாரதி ஆட்டோவில் ஏறுகிறார். அப்போது கண்ணம்மாவும் ஆட்டோவில் செல்ல வந்துவிடுகிறார். கண்ணம்மாவை கண்டு ஒதுங்கிப் போகும் பாரதியை கண்ணம்மா வலுக்கட்டாயமாக ஆட்டோவில் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

இங்குதான் ஆட்டோகாரர் எதிர்பார்த்த அந்த நிகழ்வு நடக்கிறது. சென்னையில் உள்ள சாலைகள் எப்படி இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதை வைத்தே இந்த காட்சியை ரொமான்ஸாக மாற்றி விட்டார் நம் இயக்குனர். குண்டும், குழியுமான சாலையில் ஆட்டோக்காரர் வேண்டும் என்றே எக்குத்தப்பாக வண்டி ஓட்டுகிறார்.

இதனால் பாரதி, கண்ணம்மா இருவரும் பேலன்ஸ் இல்லாமல் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டே இருக்கின்றனர். கண்ணம்மா சரியாக உட்கார முடியாமல் பாரதியை பிடித்து கொண்டு வருகிறார். இதனால் கோபமடையும் பாரதியை தள்ளி உட்காரு கண்ணம்மாவை என்று திட்டி கொண்டே வருகிறார்.

ஒரு வழியாக ஸ்கூலுக்கு வரும் இருவரையும் பார்க்கும் குழந்தைகள் என்ன ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கீங்க என்று கேள்வி கேட்கின்றனர். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பாரதி முழித்தபடி நிற்கிறார். தற்போது இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் என்னப்பா அடுத்த ரொமான்ஸா என்று கலாய்த்து வருகின்றனர்.

மேலும் யாரும் பேசத் துணியாத சென்னை அவலங்களை இப்படி ஒரு காட்சி மூலம் பகிரங்கப்படுத்திய இயக்குனருக்கு நம் சார்பாக ஒரு பாராட்டையும் தெரிவித்து விடுவோம். ப்ரோமோ வீடியோ