டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் வாரத்திற்கான எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது. வெண்பாவின் கெட்ட எண்ணத்தைப் பற்றி அறிந்த பாரதி அவரிடம் இனிமேல் என்னை பார்க்க வராதே என்று கூறுகிறார்.
மேலும் தன் குடும்பத்தினரிடம் கோர்ட்டு உத்தரவுப்படி நான் கண்ணமாவுடன் வாழ அவள் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் குடும்பத்தினர் எப்படியோ இருவரும் ஒன்று சேர்ந்தால் சரிதான் என்று சம்மதிக்கின்றனர்.
அப்பொழுது பாரதியின் தாய் சௌந்தர்யா கண்ணம்மாவின் குழந்தை லக்ஷ்மியை கொஞ்ச நாள் எங்களுடன் வைத்துக் கொள்கிறோம் என்று கூறி அழைத்துச் செல்கிறார். பாரதியும், கண்ணம்மாவும் தனியாக இருந்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்பதே சௌந்தர்யாவின் திட்டம்.
குழந்தையை சௌந்தர்யாவுடன் அனுப்பி வைத்த கண்ணம்மா பாரதியின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக தன்னை அழகாக தயார் படுத்திக் கொள்கிறார். அப்பொழுது பாரதி லக்கேஜ் உடன் கண்ணம்மாவின் வீட்டிற்கு வருகிறார். பாரதியைப் பார்த்து கண்ணம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
ஆனால் பாரதியோ கோபமாக கண்ணம்மாவிடம் கோர்ட்டில் சொன்னது போல ஆறு மாதங்கள் என்னால் எங்கு இருக்க முடியாது என்றும் ஆறே நாளில் அய்யோ சாமி ஆளை விடு என்று உன்னை கதற வைப்பேன் என்று சவால் விடுகிறார்.
இதைக் கேட்ட கண்ணம்மா உன்னால் முடிந்தால் செய் பார்க்கலாம் என்பதுபோல் பாரதியைப் பார்த்து சிரிக்கிறார். இவ்வளவு தூரம் கதையை நகர்த்தும் டைரக்டர் ஏன் இந்த டிஎன்ஏ டெஸ்டை மட்டும் மறந்து விட்டார் என்று தெரியவில்லை. ஆகமொத்தம் சீரியலை இப்ப முடிக்க மாட்டீங்க என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.