சமையலம்மாவை வெளுத்து வாங்கிய DNA டாக்டர்.. இதுக்கு மாவே ஆட்டி இருக்கலாம்!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் புதிதாக விக்ரம் துவங்கிய ஹாஸ்பிடலில் பாரதி முதன்மை மருத்துவராக பணிபுரியும் அதே இடத்தில்தான் கண்ணம்மாவும் அட்மின் ஆபீஸராக வேலை செய்கிறாள்.

இவளுக்கு இந்த வேலை புதிது தான் என்றாலும் முன்பு கண்ணம்மா, சமையல் அம்மாவாகவும் மாவு அரைத்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டதால் அதில் போதுமான வருமானம் ஈட்ட முடியாமல் தற்போது சௌந்தர்யாவின் அறிவுரையின்படி அட்மின் ஆபீஸராக மருத்துவமனையில் பணி புரிந்து கொண்டிருக்கிறாள்.

எனவே பாரதி எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற அட்டவணையை கண்ணம்மா தான் போட்டுக் கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறாள். இதற்காக இன்று பாரதியிடம் அந்த அட்டவணையை கொடுக்கும்போது பாரதி அதைக் கிழித்து எறிந்து கண்ணம்மாவின் மூஞ்சியில் விட்டெறிந்தான்.

ஏனென்றால் அறுவை சிகிச்சை மதிய நேரத்தில் எப்பொழுதுமே நடக்காது. ஏனென்றால் நோயாளிகள் மதிய நேரத்தில் அதிகமாக வாந்தி எடுக்கவும் சோர்வடைய வாய்ப்பிருக்கிறது. ஆகையால் எந்த அறுவை சிகிச்சையும் இளம் காலை வேளையில் மட்டுமே நடக்கும்.

அப்படி இல்லை என்றால் அவசரமாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் மாலை நேரத்தில் நடக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு இனிமேல் அட்டவணையை தயார் செய் என கண்ணம்மாவை பாரதி வெளுத்து வாங்குகிறார்.

இருப்பினும் கண்ணம்மா இந்த விஷயத்தில் கோபப்படாமல் தன்னுடைய தவறை என்ன என்பதை பாரதியிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்படியே நடக்க முயற்சி செய்வதாக பாரதியிடம் பணிந்து பேசுகிறாள். அதுமட்டுமின்றி கண்ணம்மா பாரதியை ஒரு மருத்துவராக மட்டுமே பார்ப்பதாகவும் ஒரு அட்மின் ஆபீஸராக தன்னை அணுக வேண்டும் என்றும் பாரதி இடம் தெளிவாக பேசி விட்டாள்.