Vijay Tv: சீரியலைப் பொறுத்தவரை கதைகள் விறுவிறுப்பாகவும் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை பொருத்து மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து வருவார்கள். அந்த வகையில் சாயங்கால நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்போதுமே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
ஏனென்றால் குடும்பங்களில் வேலை பார்த்துவிட்டு சாயங்காலம் ஓய்வெடுக்கும் பொழுது தொடர்ந்து சீரியலை பார்த்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக புள்ளிகள் பெற்று விடும். இதற்கிடையில் மதியம் ஒளிபரப்பாகும் சீரியல் கதைகள் நன்றாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகாமல் போய்விடுகிறது.
அப்படி சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னும் பின்னும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான புத்தம்புது தொடரான தனம் என்ற சீரியலின் கதை பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது. ஆசையாக காதலித்த கணவர் ஒரு சூழ்நிலையில் இறந்த பிறகு புகுந்த வீட்டை தன் குடும்பமாக ஏற்றுக்கொண்டு கரை சேர்க்க நினைக்கும் தனத்தின் லட்சியமாகத்தான் சீரியல் இருக்கிறது.
இதில் இப்பொழுது வரை தனம் சிங்கிளாக இருந்து கணவர் ஓட்டி வந்த ஆட்டோவை ஓட்டி அதன் மூலம் புகுந்த வீட்டை பார்த்துக் கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் புதுசாக ஒரு குடும்பம் என்டரி கொடுக்கப் போகிறது. அந்த வகையில் புதுசாக வரப்போகும் கதாநாயகன் ஏற்கனவே நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார்.
அப்படி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிக் பாஸ் மூலம் வாய்ப்பு கிடைத்ததும் அதற்குள் நுழைந்து விட்டார். அதில் பிரபலமான ஒருவர்தான் சின்னத்திரை நாயகன் சத்யா. இவர் முதன் முதலில் நீலக்குயில் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வேலைக்காரன் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.
அடுத்து ஜீ தமிழில் அண்ணா சீரியலிலும் விஜய் டிவியில் பணிவிலும் மலர்வணம் என்ற சீரியல் மற்றும் கனா காணும் காலங்கள் என்ற தொடரிலும் நடித்து வந்தார். அப்பொழுது பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்ததால் அதற்குள் போனார். பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு பாதிலேயே வந்த இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்த சூழலில் மறுபடியும் விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக புதுசாக வந்த தனம் என்ற சீரியலில் கதாநாயகனாக கம்பேக் கொடுக்கப் போகிறார். இதில் அவர் ஒரு குடும்பத்துடன் வருவது போல அந்த குடும்பத்திற்கு இவர் தான் ஆணிவேராக இருந்து சப்போர்ட் பண்ணப் போகிறார்.
மேலும் இவர்தான் தனத்திற்கும் ஆதரவாக இருக்கப் போகிறார். திறமை இருந்தால் வாய்ப்பு நிச்சயம் என்பதற்கு ஏற்ப விஜய் டிவி தொடர்ந்து திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது.