துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் பிக் பாஸ் ஜோடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அஜித் வலிமை படத்தை தொடர்ந்த தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மேலும் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

துணிவு படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது அஜித்துடன் அவர்கள் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபல தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான முகங்களாக மாறிவிடுகிறார்கள். தினமும் அவர்களைப் பார்ப்பதால் அவர்களின் இயல்பு குணங்கள் ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கிறது.

மேலும் பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் வெள்ளித்திரைக்கு செல்வதற்காக தான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தாமரை வெள்ளி திரையில் நடிக்க உள்ளார். இந்நிலையில் கடந்த சீசனில் மிகவும் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவனி.

இவர்கள் பிபி ஜோடியில் பங்கு பெற்ற டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றனர். இந்நிலையில் அமீர், பாவனி, சிபி மூவரும் துணிவு படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமீபத்தில் விமானத்தில் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது அவர்கள் அஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

அஜித்துடன் செல்பி எடுத்துக் கொண்ட அமீர், பாவனி

Ajith-Amir-Pavani

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அமீர், பாவனி இருவரும் முதல்முறையாக வெள்ளிதிரைக்கு வரும் பொழுது டாப் நடிகரான அஜித்துடன் நடிப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் துணிவு படத்தைப் பற்றி அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

துணிவு சூட்டிங் ஸ்பாட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள்

Thunivu-shooting-spot