பிக்பாஸில் முதல்முறையாக கதறி அழுத சீரியல் நடிகை.. கிறுக்குத்தனமாக செயல்பட்ட நடிகர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கமல்ஹாசன் தொகுப்பில் கிரான்ட் ஒப்பனிங் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  கடந்த சீசன்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து புஷ்னு போனதுதான் மிச்சம், அதனால் தற்போது பிக் பாஸ் சீசன் 6 இல் ஒவ்வொரு போட்டியாளரும் கச்சிதமாக தேர்வு செய்துள்ளனர்.

இந்த பிக் பாஸ் சீசன் 6 ஜிபி முத்து, ஜனனி, VJ மகாலட்சுமி, அமுதவணன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜிபி முத்துவின் எதார்த்தமான பேச்சும் ஜனனியின் குழந்தைத்தனமான செயலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் ஜிபி முத்து, ஜனனி தனது தங்கை எனவும் தங்கையின் மூலம் தனக்கு ஸ்ரீலங்கா மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பொருத்தவரை ஆரம்பத்தில் சுமூகமாக சென்றாலும் போகப்போக போட்டியாளர்கள் இடையே கோபம், வெறுப்பு, பொறாமை என அனைத்தும் வந்துவிடும் பின்பு ஒவ்வொரு செயலுக்கும் யாராவது ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் தற்போது முதல்முறையாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆயிஷா அழுதுள்ளார்.

அதாவது பிக் பாஸ் இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்ளிகடம் பழகாமல் இருக்கிறீர்கள். அப்படி நீங்கள் பழக வேண்டும் என நினைக்கும் போட்டியாளரை அழைத்து பேசி பழகுமாறு பிக்பாஸ் கூறியுள்ளார்.

அந்தப் போட்டியில் கலந்து கொண்ட அசல் கோளாறு ஆயிஷாவிடம் பேச அழைத்தார். அப்போது ஆயிஷா யதார்த்தமாக சொல்லுடா என கேட்டுள்ளார். அதற்கு அசல் கோளாறு என்னது சொல்லுடா வா பின்பு ஆயிஷா சரி சொல்லுங்க எனக் கூறியுள்ளார். அதற்கு என்னது சொல்லுங்களா என மேலும் மேலும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்.

பின்பு ஆயிஷா எந்த போட்டியாளரும் இல்லாத ஒரு இடத்தில் போய் அமர்ந்து கதறி அழுதுள்ளார். இதனை பார்த்த சக போட்டியாளர்கள் அசல் கோலாரிடம் கூப்பிட்டு ஆயிஷா அழுததை கூறியுள்ளனர், பின்பு சக போட்டியாளர்கள் ஆயிஷாவை அழைத்து சமாதான படுத்தி உள்ளனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →