மலர்ந்த காதலை பிரித்த பிக் பாஸ்.. இந்த வாரம் உறுதியாக வெளியேறப் போகும் நபர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நிவாஷினி வெளியேறினார். இந்த வாரம் நாமினேஷனில் அசீம், கதிரவன், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் உட்பட ஏழு பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கமல் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் கமல் நலம் பெற்ற வீடு திரும்பி உள்ளார்.

அதனால் இந்த வாரம் உலகநாயகன் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். முன்னதாக குறைந்த வாக்குகள் பெற்ற மணிகண்டன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகுவதாக தகவல் வெளியானது. ஆனால் ராபர்ட் மாஸ்டர் தான் உறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

டான்ஸ் மாஸ்டர் ஆன ராபர்ட் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற வனிதா உடன் ராபர்ட் மாஸ்டர் கிசுகிசுக்கப்பட்டார். இது குறித்த வனிதா வெளிப்படையாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய பட பிரமோஷனுக்காக தான் ராபர்ட் மாஸ்டரை பயன்படுத்திக் கொண்டேன் என கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்த ராபர்ட் மாஸ்டர் திருமணமான சில வருடங்களிலேயே தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்து வாழ்வதாக உருக்கமாக பேசியிருந்தார். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவர் ரக்ஷிதா உடன் எல்லை மீறி பழகுவது ரசிகர்கள் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதை நேரடியாக ராபர்ட் மாஸ்டரிடம் சொல்ல முடியாமல் ரக்ஷிதாவும் தடுமாறி வந்தார். இந்நிலையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸில் இருந்து வெளியேறுவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் வெளிவந்த என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க போகிறாரோ.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →