புது சீரியலுக்கு 30 ஆம் தேதி நாள் குறிச்ச சேனல்.. மாற்றப்பட்ட பழைய சீரியலின் நேரம்

New Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அதையெல்லாம் மாற்றும் விதமாக விஜய் டிவி சேனலும் போட்டி போட்டு புதுப்புது நாடகங்களை கொண்டு வந்து தற்போது கிட்டத்தட்ட 13 சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

இப்படி சன் டிவி விஜய் டிவி இரண்டு பேரும் மோதி வந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஜீ தமிழ் சேனலும் சீரியலை கொண்டு வந்தார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவி ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி போன்ற 3 சேனல்கள் தான் சீரியலில் டாப்பில் இருக்கிறது.

அதிலும் ஜீ தமிழில் சொல்லவே தேவையில்லை புதுசு புதுசாக நாடகம் வந்து கொண்டே இருக்கிறது. பிரமோவை பார்க்கும்பொழுது சீரியல் கதைகள் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது போல் மக்களை கவர்ந்து விட்டது.

அந்த வகையில் அடுத்து புதுசாக வரப்போகும் வாரிசு மற்றும் சின்னஞ்சிறு கிளிகள் சீரியலின் ப்ரோமோ வெளியாகிவிட்டது. இதில் முதலில் வரப்போகும் சீரியல் வாரிசு. இதற்கான நாளையும் குறித்து விட்டார்கள் அந்த வகையில் வருகிற 30-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு வாரிசு சீரியல் ஆரம்பமாகப்போகிறது.

ஆனால் இந்த நேரத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மௌனம் பேசியதே சீரியல் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மதியம் இரண்டு சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

அதனால் இதில் ஏதாவது ஒரு சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக மௌனம் பேசியதை கொண்டுட்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சின்னஞ்சிறு கிளியே சீரியல் ப்ரைம் டைமில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.