Serial: சீரியல் மூலம் டிஆர்பி ரேட்டிங் கூடுகிறது என்பது சரிதான். ஆனால் அதற்காக தினம் தினம் ஒரு சீரியல்களை புதுசு புதுசாக கொண்டு வருவதை பார்க்கும் பொழுது என்னடா நடக்குது இங்கே என்று சொல்வதற்கு ஏற்ப தான் இருக்கிறது. அந்த வகையில் போட்டி போட்டு ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது சீரியல்களை இறக்கி வருகிறது.
சன் டிவியில் ஆடுகளம் சீரியலைத் தொடர்ந்து வினோதினி சீரியல் இந்த வாரத்தில் இருந்து மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக துளசி மற்றும் பராசக்தி என்ற இரண்டு சீரியல் வரிசையில் இருக்கிறது. இதே மாதிரி விஜய் டிவியில் புத்தம் புதுசாக சீரியல்கள் அடுத்தடுத்து வரப்போகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பூங்காற்று திரும்புமா என்ற சீரியல் ஆரம்பிக்கப்பட்டது. இதே மாதிரி தென்றலே மெல்ல பேசு என்ற சீரியலும் வரப்போகிறது. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் கெட்டி மேளம், மனசெல்லாம் போன்ற இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதே மாதிரி வருகிற திங்கட்கிழமை முதல் அயலி என்ற சீரியல் புத்தம் புதிதாக இரவு 8:30 மணிக்கு வரப்போகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் என்ற இன்னொரு சீரியலும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. ஹீரோவாக ஜெய் ஸ்ரீனிவாஸ் குமார் என்பவர் கமிட்டாகி இருக்கிறார். இவர் சுந்தரி சீரியலில் சுந்தரியின் நெருங்கிய நண்பராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இவருக்கு ஜோடியாக ஸ்வேதா புதுமுக நாயகியாக கமிட்டாகி இருக்கிறார். அத்துடன் இதில் முக்கியமான வில்லியாக நடிகை சக்தி கமிட் ஆகியுள்ளார். இவர் கலைஞர் டிவியில் ரஞ்சிதமே என்ற சீரியலில் கல்பனா கேரக்டரில் நடித்து மக்களிடம் பரிச்சயமாக இருக்கிறார்.
அப்படிப்பட்டவர் ஜீ தமிழ் சேனலில் தமிழ் என்ற சீரியல் மூலம் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி எல்லா சேனல்களிலும் போட்டி போட்டு புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வருகிறார்கள். இதற்கு காரணம் சீரியல் மூலம் தான் அவர்களுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் கிடைக்குது என்பதால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.