Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், விருப்பமில்லாமல் வீட்டில் இருக்கும் நிலா மனசை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தனக்கு பொண்டாட்டியாகவும் வீட்டிற்கு ஏற்ற மருமகளாகவும் கொண்டுவர வேண்டும் என்று சோழன் ஆசைப்படுகிறார். அதனால் நிலாவின் மனசை மாற்றும் விதமாக நிலாவுக்கு பிடித்த விஷயங்களை செய்ய ஆரம்பிக்கிறார்.
அந்த வகையில் நிலாவுக்கு டிரஸ்சை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார். ஆனால் நிலா நைட்டி போட மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே சோழன் ஒரு டி-ஷர்ட் பேண்ட் வாங்கிட்டு வந்து சர்ப்ரைஸ் பண்ணுவதற்கு தயாராகிவிட்டார். ஆனால் நடேசன் அது தனக்காக தான் வாங்கிட்டு வந்திருக்கான் என்று தவறாக நினைத்து போட்டுட்டு வந்து விடுகிறார். அந்த கோளத்தில் நடேசனை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் சோழனுக்கு மட்டும் கோபம் வந்த நிலையில் அப்பாவை திட்டுகிறார். உடனே நிலா எனக்கு இது பொருத்தமாக இருக்காது, அதனால் அவரே போட்டுக் கொள்ளட்டும் என்று சொல்லிவிடுகிறார். பிறகு சோழனை தனியாக சந்தித்து இந்த மாதிரி எனக்கு எதுவும் இனி வாங்கி கொடுக்க வேண்டாம். எனக்கு எது தேவை என்று எனக்குத் தெரியும். அதை நானே போய் வாங்கிக் கொள்கிறேன்.
நீங்கள் இந்த மாதிரி வாங்கி தருவது எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார். இதனால் அப்சட்டான சோழன் வீட்டுக்கு வந்திருக்கும் கார்த்திகாவிடம் இது உங்களுக்காக சேரன் அண்ணன் வாங்கிட்டு வந்தது என்று சொல்லி நைட்டியை கொடுத்து விடுகிறார். உடனே கார்த்திகாவும் சந்தோஷப்பட்டு அந்த டிரஸ்ஸை வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்.
அடுத்ததாக இன்டர்வியூக்கு நிலா தயாராகிய நிலையில் இதற்கு காரணமானவங்க சேரன் தான் என்று நினைத்து சேரனுக்கு நன்றி சொல்கிறார். ஆனால் சேரன் ஒரு இன்ஜினியர் இல்லை என்பதால் குற்ற உணர்ச்சியால் தடுமாறுகிறார். பிறகு நிலாவை பார்த்து சேரன் உண்மையை சொல்லிவிடுகிறார். அதாவது நான் ஆர்கிடெக்ட் கிடையாது, சாதாரண கொத்தனார் வேலை பார்க்கும் மேஸ்திரி என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை சந்தித்து எதற்காக தேவை இல்லாமல் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு சோழன் நான் என்ன சொன்னேன் என்று கேட்ட நிலையில் உங்க அண்ணன் ஆர்க்கிடெக் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. எதற்காக இப்படி சொன்னீங்க, இன்னும் என்னெல்லாம் பொய் சொல்லி இருக்கீங்க என்று கேட்கிறார். இதனால் உண்மையை எப்படி சொல்வது என்று தெரியாமல் சோழன் முழித்துக் கொண்டிருக்கிறார்.