தப்புக்கு மேல் தப்பு பண்ணும் சோழன், பரிதவிக்கும் நிலா.. கார்த்திகாவை நினைத்து பீல் பண்ணும் சேரன்

Ayyanar Thunai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா ஆதார் கார்டு எப்படியாவது வாங்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். அதற்காக அண்ணியிடமும் உதவி கேட்டு ஆதார் கார்டை வாங்க சோழனை கூட்டிட்டு போனார். ஆனால் அங்கே போன இடத்தில் பழைய சிம் வேண்டும் என்று சொன்னதால் ஆதார் கார்டு கிடைக்காமல் போய்விட்டது.

அந்த நேரத்தில் அண்ணி போன் பண்ணி உனக்கு கொடுத்த நம்பர் உன்னுடைய ஆதார் கார்டு இல்லை. நான் உனக்கு உதவி பண்ணுகிறேன் என்று தெரிந்ததும் உங்க அண்ணன் உன்னுடைய நம்பருக்கு பதிலாக என்னுடைய நம்பரை மாத்தி கொடுத்து விட்டார். அது மட்டும் இல்லாமல் உனக்கு உதவி செய்ததை என்னிடம் சொல்லி திட்டி இனிமேலும் ஏதாவது இப்படி பண்ணினா வீட்டை விட்டு அனுப்பி விடுவேன் என்று கரராக சொல்லிவிட்டார்.

அதனால் என்னை மன்னித்துவிடு உனக்கு என்னால் உதவி பண்ண முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதை நினைத்து பீல் பண்ணும் நிலா, சோழனிடம் புலம்புகிறார். உடனே சோழன் புது ஆதார் கார்டை வாங்கலாம் என்று கூட்டிட்டு போகிறார். அங்கே அட்ரஸ் ப்ரூஃப், ஐடி ப்ரூப் வேண்டும் என்பதால் புதுசாகவும் வாங்க முடியவில்லை. இதனால் நிலா எதுவும் பண்ண முடியாமல் பரிதவித்திருக்கிறார்.

ஆனால் நிலா படும் கஷ்டத்தை பார்த்து சோழன் பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது நிலாவின் ஆதார் கார்டு சோழனிடம் இருக்கிறது. அதை வைத்து தான் முறைப்படி கல்யாணத்தை ரிஜிஸ்ட்ரேஷனும் செய்தார். அப்படி இருக்கும் பொழுது அட்லீஸ்ட் நிலா படும் கஷ்டத்தை பார்த்து சோழன் உதவி செய்யும் விதமாக அந்த ஆதார் கார்டை கொடுத்து இருக்கலாம்.

ஆனால் அப்படியும் கொடுக்காமல் கூடவே இருந்து நடித்துக் கொண்டு வருகிறார். இதனை அடுத்து சேரனுக்கு பார்த்த பெண் குடும்பத்தில் இருப்பவர்கள் ஓகே சொன்ன விஷயம் சேரனின் தம்பிகளுக்கு புரோக்கர் மூலம் தெரிந்து விட்டது. ஆனாலும் எதற்காக சேரன் அண்ணா நம்ம கிட்ட சொல்லவில்லை என்ற காரணத்தை தெரிந்து கொள்ள சோழன் நிலா பொண்ணு வீட்டுக்கு போகிறார்கள்.

அங்கே போனதும் பொண்ணு சொன்னது என்னவென்றால் எனக்கு அவரை கல்யாணம் பண்ண இஷ்டம். ஆனால் தனி குடித்தனம் வர வேண்டும் என்று சொன்னேன். அவர் அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் போய்விட்டார் என சொல்கிறது. இதை கேட்டதும் சேரனின் தம்பிகள் தனி குடித்தனத்துக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனால் சேரன் எனக்கு கல்யாணத்தை விட என்னுடைய தம்பிகள் தான் முக்கியம் என்று செண்டிமெண்டாக பேசி கல்யாணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் சேரன் மனதில் கார்த்திகா தான் இருக்கிறாள். அதனால் கார்த்திகாவை மறக்க முடியாமல் சேரன் தவிக்கிறார்.