Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் சொன்னது எல்லாமே பொய் என்று நிலாவுக்கு புரிந்து விட்டது. அதாவது சேரன் வேலை பார்ப்பது மேஸ்திரி ஆக, பாண்டியன் மெக்கானிக்கலா வேலை பார்க்கிறான், பல்லவன் வெளிநாட்டுக்கு போயி படிப்பதற்கு சம்பந்தமே இல்லை என்று நிலா புரிந்து கொண்டார்.
உடனே சோழனிடம் இதைப் பற்றி கேட்டதற்கு உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும், நீங்கள் எங்க வீட்டுக்கு வருவீங்க என்று நான் நினைக்கல. அதனால அறிமுகம் தெரியாத பெண்ணிடம் நான் இதற்கு என்னுடைய குடும்பத்தையும், கூட பிறந்தவங்களையும் பற்றி குறைத்து பேசணும் என்று தான் நான் பொய் சொன்னேன் என நிலாவிடம் சமாளித்து விட்டார்.
அடுத்ததாக நடேசன், வீட்டிற்கு வந்து நிலா மற்றும் சோழனுக்கு நடந்த ரிசப்ஷன் போட்டோவை கொண்டு வந்து மாட்டுகிறார். இதை பார்த்ததும் சோழனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் நிலாவிற்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் நிலவைப் பொறுத்தவரை சோழனுடன் நடந்தது ஒரு பொம்மை கல்யாணம் தான் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனாலும் அந்த போட்டோவை கழட்ட முடியாது என்பதால் அங்கு தான் இருக்கப்போகிறது.
இதனை அடுத்து கார்த்திகாவின் அப்பா வெளிநாட்டில் இருந்து வந்ததால் கார்த்திகாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கு ஏற்பாடு பண்ணுகிறார்கள். இது பிடிக்காத கார்த்திகா நேரடியாக சேரன் வீட்டிற்கு வந்து சேரனை அரவணைத்து எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் எனக்கு உங்களை தான் பிடித்து இருக்கிறது, உங்களுடன் வாழ வேண்டும் என்று தான் ஆசை என சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் கார்த்திகாவின் அம்மா மற்றும் அப்பா வந்து கார்த்திகாவை அடித்ததோடு மட்டுமில்லாமல் சேரணையும் அடித்து கஷ்டப்படுத்தி விட்டார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்த நிலா, சேரன் மீது எந்த தப்பும் இல்லை. உங்க பொண்ணு தான் சேரனை தேடி வந்தால், எது பேச வேண்டுமானாலும் உங்க பொண்ணிடம் வீட்டில் போய் பேசுங்க என்று சொல்கிறார்.
ஆனால் சேரன் அடி வாங்கியதை கேள்விப்பட்ட பாண்டியன் மற்றும் சோழன் ஆக்ரோஷமாகி எங்க அண்ணனை எப்படி அவன் அடிக்கலாம் என்று சேரனை கூட்டிட்டு கார்த்திகா வீட்டிற்கு போகிறார்கள். அந்த வகையில் ஒரு தரமான சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கேற்ப ஆக்ஷனில் இறங்கப் போகும் பாண்டியன் மற்றும் சோழன், கார்த்திகாவை சேரனுடன் சேர்த்து வைக்கும் பொறுப்பில் கல்யாணத்தை பண்ணி வைத்து விடுவார்கள்.